தமிழக எம்.பி ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்து முன்னணி சார்பில் புதுச்சேரியில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் எதிரொலியாக இதுவரை 5 தமிழக அரசுப் பேருந்துகள், இரண்டு தனியார் கல்லூரிகளின் மாணவர் பேருந்துகள் மற்றும் ஒரு தனியார் பயணியர் பேருந்தின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து புதுச்சேரி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பந்த் அறிவிப்பின் தொடர்ச்சியாக இன்று ஒருசில தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்திருக்கின்றன. அதில் உப்பளம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பெண்கள் பள்ளி, 1 முதல் 10-ம் வகுப்பு வரை விடுமுறை அளித்துவிட்டு +1 மற்றும் +2 மாணவிகளுக்கு மட்டும் இன்று காலாண்டு தேர்வு நடத்தியது. பா.ஜ.கவினரை வெளியேற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் அதை கேள்விப்பட்டு தனது ஆதரவாளர்களுடன் அந்த பள்ளிக்குள் நுழைந்த முதலியார்பேட்டை பா.ஜ.க பிரமுகர் வெற்றிச்செல்வன் என்பவர், தேர்வை நிறுத்தும்படி கூறினார். அப்போது அவர்களை சூழ்ந்துகொண்ட 500-க்கும் மேற்பட்...