அமைச்சர் சேகர்பாபு அண்ணன் சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் பி.கே.சேகர்பாபு. இவர் அண்ணன் பெயர் தேவராஜ், சென்னையில் குடும்பத்துடன் வசித்துவந்தார்.
தேவராஜ் கடந்த சில தினங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தேவராஜ் நேற்றைய தினம் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கீழ்பாக்கம் ஆயிஷா மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
Comments
Post a Comment