Skip to main content

புதுச்சேரி: தேர்வை நிறுத்தச் சொன்ன பாஜக-வினர்... `வெளியே போ' என எதிர்த்த பெற்றோர்கள்

தமிழக எம்.பி ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்து முன்னணி சார்பில் புதுச்சேரியில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் எதிரொலியாக இதுவரை 5 தமிழக அரசுப் பேருந்துகள், இரண்டு தனியார் கல்லூரிகளின் மாணவர் பேருந்துகள் மற்றும் ஒரு தனியார் பயணியர் பேருந்தின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து புதுச்சேரி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பந்த் அறிவிப்பின் தொடர்ச்சியாக இன்று ஒருசில தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்திருக்கின்றன. அதில் உப்பளம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பெண்கள் பள்ளி, 1 முதல் 10-ம் வகுப்பு வரை விடுமுறை அளித்துவிட்டு +1 மற்றும் +2 மாணவிகளுக்கு மட்டும் இன்று காலாண்டு தேர்வு நடத்தியது.

பா.ஜ.கவினரை வெளியேற்றும் மாணவிகளின் பெற்றோர்கள்

அதை கேள்விப்பட்டு தனது ஆதரவாளர்களுடன் அந்த பள்ளிக்குள் நுழைந்த முதலியார்பேட்டை பா.ஜ.க பிரமுகர் வெற்றிச்செல்வன் என்பவர், தேர்வை நிறுத்தும்படி கூறினார். அப்போது அவர்களை சூழ்ந்துகொண்ட 500-க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள், ”எங்கள் பிள்ளைகளின் தேர்வை நிறுத்தச் சொல்ல நீங்கள் யார் ? உங்கள் அரசியலை வேறு எங்காவது வைத்துக்கொள்ளுங்கள். பள்ளிக்குள் வராதீர்கள். மாணவர்களிடம்தான் உங்கள் அரசியலை காட்டுவீர்களா” என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து ”வெளியே போ.., வெளியே போ..” என்று கோஷம் எழுப்பி அவர்களை வெளியேற்றினார்கள். அதனால் வேறு வழியின்றி திரும்பிச் சென்றனர் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர். இதனால் அப்பகுதியே பதற்றமாக காணப்படுகிறது.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...