Skip to main content

`மாறவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள்' - 2024 ஆண்டை குறிப்பிட்டு எச்சரிக்கும் அண்ணாமலை

திமுக எம்.பி ஆ.ராசா பேசிய கருத்தை விமர்சித்த காரணத்துக்காக, கோவை பாஜக மாவட்டத் தலைவர் உத்தமராமசாமி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், திமுக அரசைக் கண்டித்து கோவை சிவனந்தாகாலனி பகுதியில் பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதில் பேசிய அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அடுத்து என்னப் பிரச்னையை கிளப்பலாம் என அறிவாலய தலைவர்கள் ரூம் போட்டு யோசிக்கின்றனர்.

பாஜக ஆர்ப்பாட்டம்

ஒருபக்கம் ஆ.ராசா, ஒருபக்கம் பயங்கரவாதிகள், காவல்துறை அடக்குமுறைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருக்கிறோம். தந்தை பெரியாரின் மரண சாசனம் புத்தகத்தை ராசா மேற்கோள் காட்டுகிறார். அதே புத்தகத்தில் பக்கம் 21இல் ஓட்டுக்கு பணம் கொடுப்பதைப் பற்றி பேசியுள்ளார். ‘மனைவியை கூட கொடுத்து ஓட்டு வாங்குவார்கள்.’ என பெரியார் சொல்லியுள்ளார். இதைப்பற்றியும் ராசா பேச வேண்டும். திராவிட மாடல் என்பதற்கு இதுதான் விளக்கம்.

கேரளா மலப்புரத்தில் 90% இஸ்லாமியர்கள் வாழும் பகுதி. அங்கும் என்.ஐ.ஏ கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல்வருக்கு ஐ.பி.சி குறித்தோ, சி.ஆர்.பி.சி பற்றி என்ன தெரியும். நான் அதில் 11 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். முதலமைச்சர்  சி.ஆர்.பி.சி படித்தாரா இல்லையா என தெரியாது. நான் அதில் 11 ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றேன்  11 ஆண்டுகள்.. 5,000 நாள்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் போட்டுள்ளேன் ஆக்குவேர் அணியாக சட்டம் தெரியும்.

பாஜக ஆர்ப்பாட்டம்

முதல்வர் தினசரி கண்ணாடியில் அவரின் முகத்தை பார்த்து அவரே 'நான் கடவுள்' என சொல்கிறார். அவர் ஒன்றும் கடவுள் கிடையாது. அவர்களுக்கு பாத்திரம் கழுவிக் கொண்டிருப்பவர்கள் தான் கிச்சன் கேபினட்களாக உள்ளனர். பெண் மேயர்களை, திமுக அமைச்சர்கள் தங்கள் வீட்டு வேலைக்காரர்கள் போல அடிமையாக நடத்துகின்றனர். பட்டியலின மக்கள் குறித்து தொடர்ந்து கேவலமாக பேசும் ஆர்.எஸ்.பாரதியை ஏன் கைது செய்யவில்லை. பெண்களை பார்த்து, ஓ.சியில் பயணிப்பதாக சொல்கிறார் பொன்முடி. நீங்கள் தான் ஓ.சியில் பிறந்து.. ஓ.சியில் ஆட்சி நடத்துகின்றீர்கள்.

தமிழக முதல்வரும், கேரளா முதல்வரும் கேடிக்கள். பினராயி விஜயன் தங்க கடத்தல் கே.டி. இவர்களுக்குள் டீல் உள்ளது. 70 ஆண்டுகளாக உடையாத பரம்பிக்குளம் அணை மதகுகள் உடைந்து 6 டி.எம்.சி தண்ணீர் வீணாகியுள்ளது. திருப்பூருக்கு எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் பிரச்னை வெடிக்கும். சிறுவாணியில் இருந்து கொடுக்கும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. உங்களுக்கும், விஜயனுக்கும் என்னதான் உடன்பாடு. பொதுவாக மனிதர்களுக்கு முதுகெலும்பு நேராகத்தான் இருக்கும். திமுக அமைச்சர்களுக்கு மட்டும் 90% வளைந்தே இருக்கும்.

அண்ணாமலை
அண்ணாமலை

எப்போதும் குனிந்து கும்பிடு போடும் கோவை பொறுப்பு அமைச்சர் டாஸ்மாக் தொடங்கி சோலார் வரை அனைத்திலும் கமிஷன் அடிக்கிறார். மின்சார கட்டணம் முதல் கட்சி பதவி தேர்தல் வரை அனைத்திலும் விஞ்ஞான முறையில் ஊழல் செய்கிறார். கோவையின் வளத்தை கொள்ளையடித்து, அதை கோபாலபுரத்துக்கு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

முதல்வர் நாத்து நட வேண்டும் என்றால் நவ இந்தியாவிற்கு வர வேண்டும்...எங்கள் நிர்வாகிகள் மீது கைவைத்த காவல்துறையை பார்த்து சொல்கிறேன், திடீரென்று உங்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தாலோ, ஓய்வு பெறும்போது பி.எஃப் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கவில்லை என்றாலோ அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. கொஞ்ச நாள் பொறுத்துக்கொள்ளுங்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடந்தாலும் நாங்கள் பொறுப்பில்லை.

பாஜக ஆர்ப்பாட்டம்
பாஜக ஆர்ப்பாட்டம்

மாறவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள். அடுத்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை முதல்வரின் செயல்தான் முடிவு செய்யும். நல்லபடியாக ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நடத்தி முடியுங்கள். நாங்கள்.எதற்கும் தயாராக இருக்கிறோம் என முதல்வரிடம் சொல்லி கொள்கிறோம்” என்றார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...