Skip to main content

``சரத்குமார் வந்தால் பாஜக நிச்சயம் ஏற்கும்!" - கரு.நாகராஜன் பளிச்

இந்து மதம் குறித்து, சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தி.மு.க துணைச் செயலாளர் ஆ.ராசா எம்.பி-மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அளவில் கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன். அந்த விவகாரம் மற்றும் சமகால அரசியல் நடப்புகள் குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஆ.ராசா மட்டுமின்றி திருமாவளவன் போன்றோர் இந்தக் கருத்தை இதற்கு முன்னர் பல மேடைகளில் பேசியிருக்கிறார்கள். ஆனால், இப்போது மட்டும் ஏன் வலுவான எதிர்ப்பு?

“அந்தந்த நேரங்களில் கண்டனம் தெரிவித்து கொண்டுதான் இருக்கிறோம். பெரும்பான்மை மக்களை தொடந்து தலைக்குணிவுக்கு ஆளாக்கி வருவதால் எங்கள் குரலும் இப்போது உரக்க இருக்கிறது. இதை சாதாரண வீரமணியோ அல்லது அவர் தொண்டர்களோ பேசியிருந்தால் மக்களும், ‘அவர்கள் அப்படிதான்’ என்று விட்டிருப்பார்கள். ஆனால், ‘90% இந்துக்கள் உள்ள கட்சி எங்களுடையது’ என மார்தட்டி கொள்ளும் தி.மு.க-வின் முக்கியத் தலைவர் பேசும் போதுதான் அதை அம்பலப்படுத்துகிறோம்.”

இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் மனுஸ்மிருதியில் இருந்துதானே குறிப்பிட்டிருக்கிறார்?

“நாம் இப்போது மனுஸ்மிருதிப்படியா வாழ்ந்துகொண்டிருக்கிறோம்... இந்திய அரசியலமைப்புச் சட்டப்படிதானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அல்லது அந்த நூல் பாடத்திட்டங்களில் ஏதும் இருக்கிறதா... அன்று இருந்த சூழலுக்கு ஏற்ப பல திட்டங்களை வகுத்து, பெரியவர்கள் ஏதாவது சொல்லி இருந்திருப்பார்கள். அன்றைக்கு அது பொருந்தக்கூடியதாக இருந்திருக்கும். அதையே இன்றைக்கு வரைக்கும் சொல்லி ஏன் மக்கள் உணர்ச்சியையும், இந்துக்களிடையே பிரிவினையையும் தூண்ட வேண்டும்?.”

ஆ.ராசா

ஆ.ராசா வைக்கும் வாதங்களுக்கு ‘விவாதிக்கலாம்’ என்று அழைப்பு விடும்போது, அதை எதிர்கொள்ளாமல் காவல்துறையில் புகார் அளிப்பதெல்லாம், எங்கு விவாதத்துக்குப் போனால் தோற்றுவிடுவோம் என்கிற அச்சத்தினாலா?

“விவாதிக்க எங்கள் இந்து மதம்தான் கிடைத்ததா. இது முட்டாள்தனமில்லையா. தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தை கொண்டு வந்தால் நல்லதா, கெட்டதா என்கிற விவாதத்துக்கு வராமல் மதத்தை வைத்து விவாதிக்க அழைப்பது அசிங்கமாக இல்லையா.  தி.மு.க-வில் 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என்று சொல்லும் நீங்களே, `இந்துக்கள் பெற்ற மகன் விபச்சாரியின் மகன்' என்று சொன்னால் என்ன நியாயம். இதை போய் விவாதிக்க வெட்கமாக இருக்காதா. சூடு சொரணை உள்ளவன் விவாதிப்பானா. தமிழ்நாட்டில் இந்து மதம் குறித்து முன்பு இவர்கள் பேசியதை எல்லாம் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை. ஆனால், இன்றைக்கு மக்கள் பிரித்துப் பார்க்கத் தெரிந்துகொண்டார்கள்.”

நரேந்திர மோடி, அமித் ஷா

தமிழ்நாட்டில் பா.ஜ.க ரூ.100 கோடி நிதி வசூலிக்கப் போவாதாக செய்திகள் வெளியாகிறதே?

“நிதி வசூல் என்பது எல்லா கட்சிக்கும் பொதுவானது. நிதி என்பது கட்சியின் செயல்பாட்டுக்கு  மட்டுமல்ல, மக்களுக்கு சேவை செய்வதற்கும் தேவைப்படுகிறது. 100 கோடி ரூபாய் என்பது இலக்கு இல்லை. நிர்வாகிகளை உற்சாகப்படுத்த அவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம். மாநிலம் முழுவதும் கட்சிப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பல்வேறு மாவட்டங்களில் கட்டடங்கள் கட்டிக் கொண்டிருக்கிறோம். எனவே அதற்கான நிதி திரட்டும் பணியாக இருக்கலாம். அவ்வாறு வசூல் செய்யும் நிதி, ‘நிதி வசூல் கமிட்டி’ மூலமே பெறப்படும். அதற்கென பொருளாளர் இருக்கிறார். நிதியை மீறி அநீதியாகவும் சில கட்சிகள் நிதி வசூல் செய்கிறார்கள். அப்படி இல்லாமல் முறையான கணக்கு வழக்குகளோடு பா.ஜ.க நிதி வசூல் செய்து வருகிறது.”

அண்ணாமலை

`மத்திய அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி மக்களிடம் கட்சியை வளர்க்காமல், விளையாட்டு போட்டிகள் என்று நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறார்கள்’ என்று உங்கள் கட்சியினர் சிலரே விமர்சிக்கிறார்களே?

“ஓட்டு வாங்குவோம் என்பது முக்கியம் கிடையாது. நண்பர்களாக நெருங்கி வரும் போதுதானே திட்டங்கள் பற்றி சொல்ல முடியும். நட்பு வட்டத்தில் அவர்களைக் கொண்டு வருவதற்கு விளையாட்டு நிச்சயம் பயன்படும். இளைஞர்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலைமீது மிகப்பெரிய ஈர்ப்பில் இருக்கிறார்கள். ஒதுங்கி நின்று க்ரேசில் இருப்பவர்களை உள்ளே கொண்டு வருவதற்கு விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகளை முன்னெடுக்கிறோம். அதன் ஒரு பகுதியாக கபடி போட்டி நடத்தியிருக்கிறோம். திரும்பாத இளைஞர்களை இன்று பா.ஜ.க பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறோம். விரைவில் தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்போகிறது. அதனால் பெரிய மாற்றத்தை தமிழ்நாடு பார்க்கும்.”

சரத்குமார்

எத்தனையோ பேரை பா.ஜ.க-வில் இணைக்கிறீர்கள். உங்களின் உறவுக்காரர் சரத்குமாருக்கு எப்போது உறுப்பினர் கார்டு கொடுக்கப் போகிறீர்கள்?

“வந்தால் நிச்சயம் வரவேற்போம்... அவர் தனியாக கட்சி நடத்திக் கொண்டிருக்கும்போது நான் ஏதும் கருத்து சொல்ல முடியாது.”

ராகுல் காந்தி

`சண்டையே இல்லாமல் சீனாவுக்கு 1,000 சதுர கிலோ மீட்டர் இந்திய மண்ணை தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார் பிரதமர் மோடி’ என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்?

“இதை ராகுல் காந்தி சொல்வதுதான் வேடிக்கை. பிரதமராக நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நம் எல்லையில் சீனாவின் அத்துமீறலை துணிவுடன் எதிர்கொண்டார். அந்த நேரத்தில் இந்தியா, சீனா எல்லையில் போர் மூண்டுவிடுமா என்று உலகமே உற்று நோக்கியது. அப்போது சீன தூதர்கள் இருவர் ராகுல் காந்தியைப் பார்த்துச் சென்றிருக்கிறார்கள். அதை மறுத்த ராகுல், அவர்கள் சீன இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்ட பிறகு ஒப்புக்கொண்டார். எனவே இந்த தேசத்தின் துரோக பிம்பம்தான் ராகுல். காங்கிரஸ்காரர்களைப் போல் எல்லை பிரச்னையிலோ, தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கோ பா.ஜ.க அரசு என்றும் `லவ் லெட்டர்' எழுதாது. துணிவான நடவடிக்கையே இருக்கும்.”

பன்னீர்செல்வம், வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிசாமி

உங்கள் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வில் பா.ஜ.க, இ.பி.ஸ் பக்கமா, ஓ.பி.எஸ் பக்கமா?

“இது குறித்து, ‘உட்கட்சி விவகாரங்களில் தலையிடுவதில்லை’ என்று தலைவர் ஏற்கெனவே பல முறை சொல்லியிருக்கிறார். சீக்கிரம் அவர்கள் பிரச்னை எல்லாம் முடியும். அப்போது இது பற்றி கேள்விக்கு பதில் கிடைக்கும்.”

முடியும் என்று உறுதியாக சொல்கிறீர்கள். எப்படி பா.ஜ.க தலையிட்டு முடித்து வைக்கப் போகிறதா?

“தி.மு.க கூட இப்படி ஒரு பழி போடாது. அப்படி எல்லாம் ஏதும் கிடையாது. எங்கள் திட்டத்துக்கான வேலை, அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி  ஓடிக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கான கமிட்டி, மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களைக் கொண்டு செல்வது என பரபரப்பாக இருக்கிறோம். எனவே எங்கள் இலக்கை அடையவே முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதன் பலன் வரும் தேர்தல்களில் தெரியும்.”


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...