Skip to main content

Doctor Vikatan: குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரலில் கொழுப்பு சேர்வது ஏன்?

Doctor Vikatan: என் உறவினருக்கு 35 வயது. அவருக்கு சிகரெட், குடி என எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. ஆனாலும், சமீபத்தில் வேறு பிரச்னைக்காக மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கல்லீரலில் கொழுப்பு சேரும் 'ஃபேட்டி லிவர்' பிரச்னை இருப்பது தெரிய வந்திருக்கிறது. 

பொதுவாக, குடிப்பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் இந்தப் பிரச்னை வரும் என கேள்விப்பட்டிருக்கிறேன்.  குடிக்காவிட்டாலும் பாதிப்பது ஏன்? 

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை
மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை

கல்லீரலில் கொழுப்பு படியும் நிலையை 'ஃபேட்டி லிவர்' (Fatty liver) என்று சொல்கிறோம். இதில், 'ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர்' (Alcoholic fatty liver) மற்றும் 'நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர்' (Non-Alcoholic fatty liver) என இருவகை உண்டு.

குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் ஃபேட்டி லிவர் பாதிப்பு வரும். கொழுப்பு படிவது அதிகரிக்க, அதிகரிக்க, ஒரு கட்டத்தில் கல்லீரல் செயலிழப்பு வரை நிலைமை தீவிரமாகலாம். பாதிப்பு குறைவாக இருக்கிறதா, மிதமானதாக இருக்கிறதா, தீவிரமாக இருக்கிறதா என்பதை அல்ட்ராசவுண்டு பரிசோதனையின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

உடல் பருமன் உள்ளவர்களுக்கு இதைக் கண்டுபிடிப்பதில் சவால்கள் இருக்கலாம். கல்லீரல் செயல்திறன் டெஸ்ட்டிலும் ஆரம்பத்தில் அசாதாரண அறிகுறிகள் தெரியாது. போகப் போகத்தான் அதன் தீவிரம் தெரிய ஆரம்பிக்கும்.

ஆரம்பத்தில் இந்தப் பிரச்னை எந்த அறிகுறியையும் காட்டாது. தீவிரமான பிறகுதான் கல்லீரல் வீக்கம், கல்லீரல் கொழுப்பு படிவதால் ஏற்படும் விரிவடைதல் வலி (Capsule stretch)  போன்றவை ஏற்படும். கல்லீரல் செயல்திறன் மோசமடையும். அடுத்தகட்டமாக கல்லீரல் செயலிழப்புவரை போகும் அபாயம் உண்டு. 

ஒரு காலத்தில் ஃபேட்டி லிவர் குறித்து பெரிதாக கவலைப்படத் தேவையில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், அதில் உண்மையில்லை.

ஒரு காலத்தில் ஃபேட்டி லிவர் குறித்து பெரிதாக கவலைப்படத் தேவையில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், அதில் உண்மையில்லை.  ரொம்பவே சீரியஸாக அணுகப்பட வேண்டிய பிரச்னை இது. சமீப வருடங்களில், கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவதன் பின்னணியில், ஃபேட்டி லிவர் பாதிப்புதான் முதன்மையான காரணமாக இருக்கிறது. 

குடிப்பழக்கத்தைத் தவிர்ப்பது, கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்ப்பது, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்ப்பது போன்றவை முக்கியம். நீரிழிவும், கொலஸ்ட்ராலும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

நார்ச்சத்தும் புரதச்சத்தும் அதிகமுள்ள உணவுகளை அதிகப்படுத்த வேண்டும். எனவே, குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்பில்லை என நீங்களாகவே நினைத்துக்கொண்டு, அலட்சியம் செய்யாமல் உடனடியாக உங்கள் உறவினரை மருத்துவ ஆலோசனை பெறச் சொல்லுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...