Skip to main content

Doctor Vikatan: சர்க்கரைநோய் இருக்கும் எல்லோரும் அவசியம் வாக்கிங் போக வேண்டுமா?

Doctor Vikatan: என் வயது 65. கடந்த பத்து வருடங்களாக எனக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. நான் தினமும் 15 நிமிடங்கள் வாக்கிங் போவேன். இது போதுமா... எத்தனை மணி நேரம், எவ்வளவு வேகமாக வாக்கிங் செய்ய வேண்டும்? சர்க்கரை நோய் உள்ள எல்லோருமே வாக்கிங் செய்ய வேண்டுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு சிகிச்சை  மருத்துவர் சண்முகம்.

நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

நீரிழிவு நோயாளிகள் வாக்கிங் செல்வது மிகமிக நல்ல பழக்கம். எப்படி நடைப்பயிற்சி மேற்கொள்வது என்பதில் பலருக்கும் பல சந்தேகங்கள் இருப்பதைப் பார்க்கிறோம். வேகமாக வியர்த்து விறுவிறுக்க நடக்க வேண்டுமா, நிதானமாக நடக்கலாமா, எத்தனை நிமிடங்கள் நடக்கலாம், எந்த நேரம் சரியானது என்றெல்லாம் கேட்கிறார்கள்.

இதுதொடர்பாக பல ஆராய்ச்சிகளும் உலகம் முழுவதும் நடைபெற்றுள்ளன. இந்த ஆய்வுகளிலிருந்து கிடைக்கும் முடிவுகள் என்னவெனில், 30 முதல் 40 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வது போதுமானது. காலையா, மாலையா என்பது உங்கள் வசதியைப் பொறுத்தது. வெறும் வயிற்றில் நடக்கக் கூடாது. அதேபோல் அதிகம் சாப்பிட்ட பிறகும் நடக்கக் கூடாது. வாரம் முழுவதும் நடக்க வேண்டுமா என்கிற கேள்விக்கு வாரத்தில் 5 நாள்கள் கட்டாயம் நடக்க வேண்டுமென்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 2 நாள்கள் நடைப்பயிற்சியைத் தவிர்த்தால் அவை அடுத்தடுத்த நாள்களாக இருக்கக் கூடாது. தொடர்ச்சியாக 2 நாள்கள் இயக்கமில்லாமல் இருப்பது சரியானது அல்ல. திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை நடைப்பயிற்சி செய்துவிட்டு சனி, ஞாயிறு என அடுத்தடுத்த 2 நாள்கள் இடைவெளி விடுவது தவறானது.

நீரிழிவு
type 5 diabetes

வேகமாக நடக்க வேண்டுமா, நிதானமாக நடக்க வேண்டுமா என்கிற சந்தேகத்துக்கும் நிபுணர்கள் சொல்கிற பதில், நீங்கள் நடப்பதை நீங்களே உணர்ந்து நடக்க வேண்டும். எந்திரத்தனமாக நடக்கக் கூடாது. நண்பர்களுடன் டீக்கடைக்கு செல்வது போலவோ, குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்வது போலவோ ரொம்பவும் ரிலாக்ஸ்டாகவும் நடக்கக் கூடாது. நடக்கிறோம் என்கிற முழுமையான உணர்வுடன் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரே வேளையில் 30 நிமிடங்களும் நடக்க முடியாது என்கிறவர்கள் நேரம் கிடைக்கும்போது நடந்து அந்த 30 நிமிடங்களை ஈடுகட்டலாம். காலையில் 15 நிமிடங்கள் நடந்தால் மாலையில் 15 நிமிடங்கள் நடப்பதும் போதுமானது.

நீரிழிவாளர்களில் நடைப்பயிற்சி செய்யக் கூடாது என சிலருக்கு அறிவுறுத்தப்படுவதுண்டு. சர்க்கரை நோயினால் காலில் ஏதேனும் பாதிப்பு இருக்கும்பட்சத்திலும், காலில் புண் இருக்கும்பட்சத்திலும், பார்வை மங்கலாக இருக்கிறவர்களும், கர்ப்பகாலத்திலும், அதிக ரத்த அழுத்தம் இருக்கும்போதும் நடைப்பயிற்சியைத் தவிர்க்கலாம். இதற்கு பதிலாக வீட்டிலேயே யோகா, தியானம் போன்ற எளிமையான பயிற்சிகளைச் செய்யலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...