Skip to main content

Doctor Vikatan: ஒருமணி நேரத்துக்கொருமுறை சிறுநீர்... உடனே வெளியேறாத சிறுநீர், தீர்வென்ன?

Doctor Vikatan: எனக்கு வயது 26. எனக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. குறிப்பாக, பயணம் செய்யும்போது இந்த உணர்வு அதிகமாக இருக்கிறது. ஆனால், தற்போது சில நாள்களாக வீட்டில் இருக்கும்போதும் இதே பிரச்னை இருக்கிறது. சிறுநீர் கழித்த பிறகும் முழுமையாகக் கழிக்கவில்லை போலவும், மீண்டும் சிறுநீர் வருவது போலவும் உணர்கிறேன். பொதுவாக ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல் இல்லை. சிறுநீர் அளவு சாதாரணமாக உள்ளது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வை என்னால் கட்டுப்படுத்த முடியும், ஆனால், அந்த உணர்வு தொடர்ந்து இருப்பது மிகவும் எரிச்சலாக இருக்கிறது. மேலும், சிறுநீர் கழிக்கச் செல்லும்போது சிறுநீர் உடனடியாக வராமல் சிறிது நேரம் கழித்துதான் ஆரம்பமாகிறது. இது என்ன பிரச்னை, இதற்கான தீர்வு என்ன?

-V SETHURAMAN, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த யூரோகைனகாலஜிஸ்ட் மீரா ராகவன்

யூரோகைனகாலஜிஸ்ட் மீரா ராகவன்

அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீர்ப்பை முழுமையாக காலியாகவில்லை என்ற தொடர்ச்சியான உணர்வு பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். சிறுநீர்ப்பை அதிக ஆக்டிவ்வாக (Overactive bladder) இருப்பது இதில் மிக முக்கியமான காரணமாக இருக்கலாம்.

இதில் சிறுநீர்ப்பை முழுமையாக நிரம்பாதபோதும் கூட, சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற வலுவான எண்ணம் ஏற்படும். சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்று (UTI) அல்லது சிறுநீர்ப்பை எரிச்சலும் கூட அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு வழிவகுக்கும். ஆனால், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வலி அல்லது சிறுநீரின் நிறத்தில் மாற்றம் இல்லாதபோது இவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

சிறுநீர் வெளியேறுவதில் தாமதம் மற்றும் சிறுநீர்ப்பை முழுமையாக காலியாகவில்லை என்ற உணர்வு ஆகியவை சிறுநீரை வெளியேற்றுவதில் உள்ள சிரமத்தைக் குறிக்கலாம். இது சில நேரங்களில் இடுப்புப் பகுதி தசைச் செயலிழப்பு (pelvic-floor dysfunction) அல்லது சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் அடைப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம். அதிக அளவில் திரவங்கள் அல்லது கஃபைன் (caffeine) பானங்களை உட்கொள்வது, மலச்சிக்கல், நீரிழிவு நோய் (Diabetes) மற்றும் சில மருந்துகள் போன்ற பிற காரணிகளும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு வழிவகுக்கும்.

சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்று (UTI) அல்லது சிறுநீர்ப்பை எரிச்சலும் கூட அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு வழிவகுக்கும்.

இந்த அறிகுறிகள் வீட்டிலும்  ஏற்படுவதாகச் சொல்கிறீர்கள். தவிர, அது உங்கள் அன்றாட வேலைகளை பாதிப்பதால், இவற்றை அலட்சியப்படுத்தாமல் இருப்பது நல்லது. இதற்கான மூலகாரணத்தைக் கண்டறிய  சிறுநீரக மருத்துவரை (Urologist) அணுகுவது சிறந்தது. பரிசோதனையின் முடிவைப் பொறுத்து, மருத்துவர் சிறுநீர்ப் பரிசோதனை, ரத்தச் சர்க்கரை பரிசோதனை, சிறுநீர் கழித்த பின் எஞ்சியுள்ள சிறுநீரின் அளவைக் கண்டறிய அல்ட்ராசவுண்ட் (Ultrasound) ஸ்கேன் மற்றும் தேவைப்பட்டால் 'யூரோஃப்ளோமெட்ரி' (Uroflowmetry) பரிசோதனைகளையும் பரிந்துரைக்கலாம். அதைப் பொறுத்து உங்களுக்கான சிகிச்சைகளை மருத்துவர் முடிவு செய்வார்.

டாக்டர் மீரா ராகவன்:

சென்னை அப்போலோ மருத்துவமனையில் யூரோகைனகாலஜிஸ்ட்டாகப் பணிபுரிகிறார்.  இத்துறையில் 19 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...