Skip to main content

Doctor Vikatan: 70 வயதில் ஒரு வேளை உணவு... இரவுக்கு வெறும் பழங்கள்... ஆரோக்கியம் பாதிக்குமா?

Doctor Vikatan:எங்கள் வீட்டில்  சிறு வயதிலிருந்தே  யாருக்கும்  பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடும் பழக்கம் கிடையாது . Brunch தான்.… என்னுடைய எழுபது வயது சகோதரி மதியம் லன்ச் சாப்பிடுகிறார். இரவு வாழைப்பழம், ஆப்பிள்,  ஆரஞ்சு என்று ஏதாவது இரண்டு பழங்கள் சாப்பிடுகிறார் .  ஒரு தோசையாவது சாப்பிடச் சொன்னாலும் வேண்டாம் என்கிறார்.  இப்போதைக்கு ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்.  ஆனால், போகப்போக சக்தி வேண்டாமா... அவர் இப்படிச் செய்வது எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. என் சகோதரி செய்வது சரியா?
-Uma, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.

கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர்
கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர்

70 வயதில் உங்கள் சகோதரி ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதே சந்தோஷமான விஷயம். அவரது வயதில் அப்படி இருப்பது ஒருவகையில் வரமும்கூட.

அதே சமயம், அவர் ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் முறையான உணவு சாப்பிடுகிறார், இரவு உணவுக்கு வெறும் பழங்கள்தான் சாப்பிடுகிறார் என்கிற போது, அவரது வயதில் அது சில பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.  ஒருவருக்கு வயதாகும்போது அடிப்படையில் உடலில் சில மாற்றங்கள் நிகழும். அதில் தசையிழப்பும் முக்கியமானது. தசையிழப்பு ஏற்பட்டால் ஒரு நபர் எப்போதும் களைப்பாகவும் பலவீனமாகவும் உணர்வார்.  எனவே, புரதச்சத்து மட்டும் போதும் என்று நினைக்காமல், கார்போஹைட்ரேட், வைட்டமின் பி 12, வைட்டமின் டி, நார்ச்சத்து என அனைத்து ஊட்டச்சத்துகளும் உணவுகளின் வழியே உடலுக்குள் போகின்றனவா என்று பார்க்க வேண்டும். 

வாரத்தில் 2-3 நாள்களுக்கு தோசையோ, பெசரட்டோ சாப்பிடலாம்.

உங்கள் சகோதரி சாப்பிடும் உணவில் மேற்சொன்ன அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றனவா என்ற பார்க்க வேண்டும்.  அதற்கேற்ப அவரது உணவுத்திட்டத்தை முறைப்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு, இரவு உணவுக்கு தோசையாகச் சாப்பிடுவதைவிட, புரதம் நிறைந்த வேறு உணவு சாப்பிடலாம்.  வாரத்தில் 2-3 நாள்களுக்கு தோசையோ, பெசரட்டோ சாப்பிடலாம். பகல் வேளையில் சுண்டல் சாப்பிடலாம். ஒரு நாளைக்கு மூன்று வேளைகளும் சாப்பிட்டே ஆக வேண்டும் என அவசியமில்லை. இரண்டு வேளைகள் சாப்பிட்டாலே போதுமானதுதான். வயதாக, ஆக ஒருவரது வளர்சிதை மாற்றமும் மந்தமாகத் தொடங்கும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.  எனவே, உங்கள் சகோதரி சத்தாகச் சாப்பிடுகிறாரா என்பதை மட்டும் கவனியுங்கள், போதுமானது.

டயட்டீஷியன் கற்பகம்:

ஆர்ட் ஆஃப் ஈட்டிங் கிளினிக்கின் சீனியர் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் ட்ரெய்னிங் ஹெட். இத்துறையில் 9 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...