Skip to main content

Doctor Vikatan: 70 ப்ளஸ் வயதில் மூட்டு வலி... நரம்பு இழுக்கும் பிரச்னை... என்ன தீர்வு?

Doctor Vikatan: எனக்கு 71 வயது ஆகிறது. வலதுபுற காலில் முட்டியின் பின்பகுதியில் நரம்பு மிகவும் இழுக்கிறது. இடுப்பில் இருந்து பாதம் வரை நரம்பு இழுத்து, மிகுந்த வலி ஏற்படுகிறது. நடந்தால் மூட்டு வலிக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த எலும்பியல் சிகிச்சை மருத்துவரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான வெங்கடரமணன் சுவாமிநாதன்.

எலும்பியல் சிகிச்சை மருத்துவரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான வெங்கடரமணன் சுவாமிநாதன்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள வலியைப் பார்க்கும்போது இது பெரும்பாலும் முழங்கால் தேய்மானம் காரணமாக ஏற்படும் பிரச்னையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

உங்களுக்குப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போதோ அல்லது உட்கார்ந்து எழுந்திருக்கும்போதோ வலி இருந்தால், அது நிச்சயமாக முழங்காலில் இருந்து வரக்கூடிய வலியாகத்தான் இருக்கும். 

இதற்கான சிகிச்சை முறையைத் தொடங்குவதற்கு முதல் கட்டமாக நீங்கள் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். அதன்படி, 

  • பிசியோதெரபி (Physiotherapy) சிகிச்சையைக் குறிப்பிட்ட நாள்களுக்கு எடுக்கலாம்.

  • தசை வலிமைக்கான பயிற்சிகள் (Strengthening exercises) மற்றும் தசை நீட்சிப் பயிற்சிகள் (Stretching exercises) செய்யலாம்.

  • கரன்ட் சிகிச்சை (Current treatment) மற்றும் அல்ட்ராசோனிக்ஸ் (Ultrasonics) சிகிச்சைகளைச் செய்யும்போது வலி குறைய வாய்ப்புள்ளது.

பிசியோதெரபி

இவற்றை எல்லாம் செய்த பிறகும் ஒருவேளை வலி குறையாமல் அப்படியே இருந்தால், முட்டிக்கு எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு முன், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவரை (Ortho Doctor) நேரில் சென்று கலந்தாலோசிப்பது நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...