Skip to main content

Doctor Vikatan: காய்ச்சல் இருக்கும் நாள்களில் குளிக்கலாமா... அது காய்ச்சலைக் குறைக்குமா?

Doctor Vikatan: காய்ச்சல் இருக்கும்போது குளிக்கக்கூடாது என்கிறார்கள் சிலர். அப்படியில்லை, குளித்தால் காய்ச்சல் குறையும் என்கிறார்கள் இன்னும் சிலர். உண்மையில் காய்ச்சல் இருக்கும்போது குளிப்பது சரியா, தவறா? 

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

பொதுவாக, தீவிரமான காய்ச்சல் இருக்கும் போது குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. உதாரணமாக, மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு காய்ச்சல் நீடிக்கிறது என்றால், அந்த நாள்கள் முழுவதும் குளிப்பதைத் தவிர்ப்பதுதான் நல்லது.  

காய்ச்சல் இல்லாத ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளவர்களுக்கே  குளிர்ந்த நீரில் குளிக்கும் போது  உடலில்  லேசான நடுக்கம் ஏற்படும். அதுவே காய்ச்சல் இருக்கும்போது குளித்தால், அந்த நடுக்கம் இன்னும் அதிகமாகும். இதனால் உடலின் உட்புற மைய வெப்பநிலை (Core temperature) மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நடுக்கம் காரணமாக காய்ச்சலின் தீவிரம் இன்னும் அதிகமாகலாம். தவிர, காய்ச்சல் நேரத்தில் குளிப்பது உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை (Dehydration) ஏற்படுத்தக்கூடும். காய்ச்சல் லேசாக இருக்கும்போதோ அல்லது தீவிர காய்ச்சல் குறைந்து உடல் குணமாகி வரும் நாள்களிலோ நீங்கள் குளிக்கலாம். 

காய்ச்சல் குறைந்து வரும் நாள்களில் உடல் சோர்வாகவோ அல்லது அதிக வியர்வையுடனோ இருந்தால், லேசான வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.

காய்ச்சல் குறைந்து வரும் நாள்களில் உடல் சோர்வாகவோ அல்லது அதிக வியர்வையுடனோ இருந்தால், லேசான வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட மிகக் குறைந்த நேரத்தில், அதாவது விரைவாகக் குளித்து முடிக்க வேண்டும். குளித்து முடித்த உடனே உடலை நன்றாகத் துடைத்துவிட வேண்டும்.
காய்ச்சலின் தீவிரம் மற்றும் அது எத்தனை நாள்களாக இருக்கிறது என்பதைப் பொறுத்தும், காய்ச்சலிலிருந்து உடல் எந்த அளவு மீண்டு வருகிறது என்பதைப் பொறுத்தும் குளிப்பதைத் தீர்மானிக்க வேண்டும். உடல் சோர்வைப் போக்குவதற்காகவோ அல்லது சில நாள்கள் குளிக்காமல் இருப்பதாலோ குளிக்க நினைப்பவர்கள் இந்த முறையைப் பின்பற்றலாம். ஆனால், தீவிர காய்ச்சல் இருக்கும் போது குளிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

குளியலைத் தவிர்க்கும் நாள்களில் டெபிட் ஸ்பாஞ்சிங் (Tepid Sponging) முறையைப் பின்பற்றலாம்.  குழந்தைகளுக்குக் காய்ச்சல் வரும்போது பொதுவாகப் பின்பற்றப்படும்  சிறந்த முறை டெபிட் ஸ்பாஞ்சிங். இதில் ஈரத்துணியைக் கொண்டு குழந்தையின் உடல் முழுவதும் ஒற்றி எடுக்கப்படும். முழுமையான  குளியலுக்கு பதிலாக, இந்த முறையில் உடலை ஈரத்துணியால் துடைத்து எடுப்பது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது.

குழந்தைகளுக்குக் காய்ச்சல் வரும் போது பொதுவாகப் பின்பற்றப்படும் சிறந்த முறை டெபிட் ஸ்பாஞ்சிங்.

காய்ச்சல் இருக்கும் போது குளித்தால் உடனே காய்ச்சல் குணமாகிவிடும் என்பது போன்ற தவறான வீடியோக்கள் மற்றும் தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அவற்றைப் பார்த்துவிட்டுப் பெற்றோர்கள் பலரும் காய்ச்சல் இருக்கும்போது குழந்தைகளைக் குளிப்பாட்டுகிறார்கள். இது முற்றிலும் தவறான செயல். எனவே, காய்ச்சல் இருக்கும் நேரத்தில் குளிக்காமல், உடலுக்குப் போதிய ஓய்வு (Rest) கொடுத்துப் பராமரிப்பதுதான் உடல ஆரோக்கியத்திற்கு நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...