Skip to main content

Doctor Vikatan: 60 வயதில் முகம், கழுத்தில் மருக்கள்... நீக்க முடியாத நிலையில் என்ன தீர்வு?

Doctor Vikatan: எனக்கு வயது 60. சில வருடங்களாக மருக்கள் பிரச்னை அதிகரித்து வருகிறது. குறிப்பாக,  முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் கறுப்பு  நிறத்தில் சிறு சிறு மருக்கள் வருகின்றன.

டாக்டரை அணுகிக் கேட்டதற்கு, பெரியதாக இருந்ததால் லேசர் மூலம் நீக்கலாம்... இந்த மருக்களை நீக்க முடியாது என்கிறார். இதற்குத் தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சருமநல மருத்துவர் பூர்ணிமா.
சருமநல மருத்துவர் பூர்ணிமா.

'ஸ்கின் டேக்' (Skin Tag) என்று சொல்லப்படும் மருக்கள், நமது உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்புத்திறன் (Insulin Resistance) காரணமாக ஏற்படுகின்றன.

மருத்துவ மொழியில் இவற்றை 'ஆக்ரோகார்டன்ஸ்' (Acrochordons) என்று  சொல்வோம். இது வருங்காலத்தில் நமக்குச் சர்க்கரை நோய் (Sugar) வரப்போவதைக் குறிக்கும் அறிகுறியாக இருக்கலாம்.

நமது சருமத்தில் ஏற்படும் தடிமன் (Skin Thickening) என்ற செயல்முறையினால்தான் கழுத்துப் பகுதியில் கருமை நிறம் மற்றும் மருக்கள் போன்றவை தோன்றுகின்றன. பலரும் இதனை வைரஸ் தொற்றினால் (Viral Etiology) ஏற்படுவதாகக் குழப்பிக்கொள்கிறார்கள்.

ஆனால், வைரஸ் தொற்றின் காரணமாகவும் மருக்கள் வர வாய்ப்புள்ளது. எனவே, இவை இரண்டையும் சரியாகப் பிரித்தறிந்து, கண்டறிவதற்கு முறையான மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

மருவின் அளவு, அது இருக்கும் விதம் மற்றும் அது உடலில் எந்தப் பகுதியில் அமைந்துள்ளது (கழுத்து அல்லது அக்குள் பகுதி) போன்றவற்றை ஆராய்ந்து அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சைகள் அளிக்கப்படும்.

மருவின் அளவு, அது இருக்கும் விதம், மற்றும் அது உடலில் எந்தப் பகுதியில் அமைந்துள்ளது (கழுத்து அல்லது அக்குள் பகுதி) போன்றவற்றை ஆராய்ந்து அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சைகள் அளிக்கப்படும்.

எலக்ட்ரோகாட்டரி (Electrocautery) என்ற சிகிச்சை முறையில் வெப்ப ஆற்றல் (Heat Energy) மூலம் மருக்கள் அகற்றப்படும். எக்சிஷன் (Excision) என்ற முறையில் மருக்கள் சாதாரணமாக வெட்டி அகற்றப்படும். லேசர் (Laser) மூலமும் அகற்றலாம். கிரையோதெரபி (Cryotherapy) என்ற சிகிச்சையில் திரவ நைட்ரஜனை (Liquid Nitrogen) பயன்படுத்தி, மருக்கள் அகற்றப்படும்.

மருக்களைக் கண்டிப்பாக நீக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவை இருப்பதால் உடலுக்கு எந்தவித பாதிப்போ அல்லது ஆபத்தோ ஏற்படாது.

இருப்பினும், கழுத்தில் சங்கிலி (Chain) அணியும்போது அதில் மாட்டி புண் ஏற்பட்டாலோ, உராய்வு காரணமாக ஏற்படும் அசௌகர்யம் ஏற்பட்டாலோ, தோற்றம் காரணமாகவோ சிலர் அவற்றை அகற்றிக்கொள்கிறார்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...