Skip to main content

Doctor Vikatan: ஓவராகச் சாப்பிட்டாலும் சிலருக்கு மட்டும் உடல் எடை ஏறாதது ஏன்?

Doctor Vikatan: சிலர் எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பதில்லை.

அதுவே இன்னும் சிலர், ஒரு நாள் ஆசைக்காகக் கொஞ்சம் பிரியாணி சாப்பிட்டாலும் அடுத்தநாளே வெயிட் மெஷின் எடை ஏறியதாகக் காட்டும்.

இந்த இரண்டுக்கும் என்ன காரணம்...  எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்
அம்பிகா சேகர்

சிலர் நிறைய சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்க மாட்டார்கள், அதே சமயம் சிலர் கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் உடல் எடை கூடிவிடும். இதற்கு நம் உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையின்மைதான் (Hormonal Imbalance) முக்கியக் காரணம். இதை 'வளர்சிதை மாற்றம்' (Metabolic Rate) என்று குறிப்பிடுகிறோம்.

சிலருக்கு இயற்கையிலேயே இந்த வளர்சிதை மாற்றம் மிக அதிகமாக (High Metabolic Rate)  இருக்கும். இவர்களது உடல், சாப்பிடும் உணவை மிக எளிதாக எரித்துச் செலவழித்துவிடும். இதன் காரணமாக, அவர்கள் என்ன சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது.

இது அவர்களுடைய உடலின் தனித்துவமான வாகு அல்லது அமைப்பு. இப்படிப்பட்டவர்கள் என்ன சாப்பிட்டாலும் அது உடனே ஜீரணமாகி, கலோரிகள் எரிக்கப்படுவதால் அவர்கள் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்னொரு புறம், சிலருக்கு உணவைப் பார்த்தாலே உடல் எடை கூடுவது போன்ற உணர்வு இருக்கும். இவர்களது உடலில் வளர்சிதை மாற்றம் மிகக் குறைவாக (Low Metabolic Rate) இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். பெற்றோரின் உடல்வாகு மற்றும் மெட்டபாலிசம் விகிதம் பிள்ளைகளுக்கும் கடத்தப்பட வாய்ப்புகள் அதிகம்.

உடற்பயிற்சி மற்றும் டயட் மூலமாக வளர்சிதை மாற்றத்தை படிப்படியாக அதிகரிக்க முடியும்.

உடலின் வளர்சிதை மாற்றத்தை நாம் சில வழிகளில் மேம்படுத்தலாம். உடற்பயிற்சி மற்றும் டயட் மூலமாக வளர்சிதை மாற்றத்தைப் படிப்படியாக அதிகரிக்க முடியும். உடலின் தசைப்பகுதியை (Muscles) வலிமையாக்கும் போது, தானாகவே மெட்டபாலிக் ரேட் (Metabolic Rate) அதிகரிக்கும். 

எனவே, குறைந்த வளர்சிதை மாற்றம் உள்ளவர்கள் உடற்பயிற்சி மற்றும் உணவு முறையைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

குறிப்பிட்ட காலகட்டத்துகு மேல், உடல் எடை கூடவே இல்லையே என்ற கவலை ஏற்படும்போது, மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில், சில நேரங்களில் தைராய்டு ஹார்மோன் (Thyroid Hormone) குறைபாடுகள் அல்லது பிரச்னைகள் இருந்தாலும், சாப்பிடும் உணவு உடனே ஜீரணமாகி உடல் எடை அதிகரிக்காமல் போகலாம். 

எனவே, மருத்துவரிடம் சென்று ஹார்மோன் பரிசோதனை செய்து, அதற்கேற்ப தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

எவ்வளவு சாப்பிட்டாலும் எடை கூடாது என்பதால் இத்தகைய உடல்வாகு உள்ள சிலர், உடற்பயிற்சி செய்யாமல் ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள். இதனால் இவர்களுக்கு சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளன. இதையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...