Skip to main content

Doctor Vikatan: பச்சையாகவா, வேக வைத்தா? முளைக்கட்டிய தானியங்களை எப்படிச் சாப்பிடுவது சரி?

Doctor Vikatan: முளைகட்டிய தானியங்களை (Sprouted grains) பச்சையாகச் சாப்பிடுவது நல்லதா அல்லது வேகவைத்துச் சாப்பிடுவது நல்லதா... இவற்றைச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை வருமா?

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.

கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்

முளைகட்டிய தானியங்களை (Sprouts) எப்போதும் பச்சையாகச் சாப்பிடும்போது, பலருக்கு அசிடிட்டி (Acidity), கேஸ்ட்ரைட்டிஸ் (Gastritis) மற்றும் தொற்று (Infection) போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலும், நாம் எந்த வகையான பயறை முளைக்கட்ட வைக்கிறோம் என்பதைப் பொறுத்தும் இது மாறுபடும்.

சிலர் கொள்ளு, கொண்டைக்கடலை போன்றவற்றை முளைக்கட்ட வைத்து, அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, அது கண்டிப்பாக அதிக வாயுத் தொல்லையை  (Gaseous) உருவாக்கும். எனவே, முளைக்கட்டிய தானியங்களை, பச்சையாகச் சாப்பிடுவதைவிட, அவற்றை  5 முதல் 10 நிமிடங்கள் வரை நன்றாக ஆவியில் வேகவைத்து (Steam பண்ணி) சாப்பிடுவதுதான் எப்போதும் மிகச்சிறந்த வழிமுறையாக இருக்கும்.

சில நிமிடங்கள் வேகவைத்த பிறகு, அதனை சாலட்களில் (Salads) சேர்த்தோ அல்லது குழம்பு அல்லது கிரேவியில் (Gravy) சேர்த்தோ சாப்பிடலாம்.

சில நிமிடங்கள் வேகவைத்த பிறகு, அதனை சாலட்களில் (Salads) சேர்த்தோ அல்லது குழம்பு அல்லது கிரேவியில் (Gravy) சேர்த்தோ சாப்பிடலாம்.

வேக வைத்த தானியங்களை ஒரு கைப்பிடி அளவு  மட்டும் ஒரு ஸ்நாக்ஸ் போலச் சாப்பிடுவதும் உடலுக்கு நன்மை பயக்கும்.
சில சமயங்களில், பச்சையாக இருக்கும் முளைக்கட்டிய தானியங்களில் பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும். இதுவும் கூட உங்களுக்கு வயிற்றுத் தொற்றை (Stomach Infection) ஏற்படுத்தலாம்.

எனவே, எப்போதும் முளைக்கட்டிய தானியங்களைச் சாப்பிடும்போது சில விஷயங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உடலில் நீர்ச்சத்து சரியாக இருக்கும்படி, போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல், அவற்றை சரியான நேர இடைவெளியில் சாப்பிட வேண்டும். இவற்றைப் பின்பற்றுவதன் மூலம், அசிடிட்டி மற்றும் வயிற்று உபாதைகள் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...