Skip to main content

Doctor Vikatan: 65 ப்ளஸ் வயதில் ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சிகள் செய்வது பாதுகாப்பானதா?

Doctor Vikatan:என் வயது 67. சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இல்லை. ஆரோக்கியமாகவே இருக்கிறேன். ஆனாலும், உடலியக்கம் குறைந்துவிட்டதால், ஏதேனும் உடற்பயிற்சி செய்யலாம் என தோன்றுகிறது.

சோஷியல் மீடியாவில் 70, 80 வயதுக்காரர்கள்கூட ஜிம்மில் வொர்க் அவுட் செய்வதைப் பார்க்கிறேன். 65 ப்ளஸ் வயதில் ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சிகள் செய்யலாமா... ஸ்ட்ரென்த் டிரெய்னிங் பயிற்சிகள் செய்வது பாதுகாப்பானதா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவரும், தீவிர சிகிச்சை நிபுணருமான மகாதேவன்

பொது மருத்துவரும், தீவிர சிகிச்சை நிபுணருமான மகாதேவன்
பொது மருத்துவரும், தீவிர சிகிச்சை நிபுணருமான மகாதேவன்

உடற்பயிற்சிகளை கார்டியோ பயிற்சிகள், ஸ்ட்ரென்த் டிரெய்னிங் பயிற்சிகள் என இரண்டாகப் பிரிக்கலாம். வாக்கிங், ஜாகிங், ஸ்விம்மிங், சைக்கிளிங்... இவையெல்லாம் கார்டியாக் பயிற்சிகளில் வரும்.

ஸ்ட்ரென்த் டிரெய்னிங் பயிற்சி என்பது குறிப்பிட்ட தசைகளை மேலும் வலுப்படுத்துவதற்கானது. அந்தத் தசைகளை மேலும் ஆக்டிவேட் செய்வதற்கான பயிற்சிகள் அவை.

ஸ்ட்ரென்த் டிரெய்னிங் பயிற்சிகளை வயதானவர்களும் செய்யலாம். ஆனால், அதற்கு முன் அவர்கள் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முதல் வேலையாக உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் உங்களை முழுமையாகப் பரிசோதித்துவிட்டு, உடல்நலம் குறித்த தகவல்களைக் கண்டறிவார்.

ரத்த அழுத்தம், பல்ஸ் போன்றவற்றைப் பார்ப்பார். நீங்கள்  ஏற்கெனவே ஏதேனும் மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தால் அவற்றில் மாற்றம் தேவையா என்றும் பார்ப்பார். 

அடிப்படையான பிளட் டெஸ்ட், இசிஜி, எக்கோ, டிரெட்மில் டெஸ்ட், மூட்டுகளுக்கான பரிசோதனை போன்றவற்றைச் செய்யச் சொல்வார். 

ஸ்ட்ரென்த் டிரெய்னிங் பயிற்சிகளால் நிச்சயம் பலன் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அதே சமயம், அந்தப் பயிற்சிகளால் உடலில் அடிபடவோ, காயம் ஏற்படவோ கூடாது

ஸ்ட்ரென்த் டிரெய்னிங் பயிற்சிகளால் நிச்சயம் பலன் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அதே சமயம், அந்தப் பயிற்சிகளால் உடலில் அடிபடவோ, காயம் ஏற்படவோ கூடாது என்பது அதைவிடவும் முக்கியம்.

எனவே, வயதானவர்கள் ஜிம்மில் சேர்ந்து வொர்க்அவுட் செய்யக்கூடாது என அர்த்தமில்லை. அது பாதுகாப்பானதுதானா, யாருக்கு, எந்த மாதிரி பயிற்சிகள் தேவை என்பதை மருத்துவர் மற்றும் ஃபிட்னெஸ் பயிற்சியாளரோடு பேசி, தெளிவுபெற்ற  பிறகு செய்வதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...