Skip to main content

ஹீட் ஸ்ட்ரோக்: `இது வெறும் சூடு இல்ல' - உயிர் காக்கும் 'மேஜிக்' கரைசல் - மருத்துவரின் Pro Tips!

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு கோடைகாலம் வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே தொடங்கி, தற்போது அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக சென்னை, வேலூர், மதுரை, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 40°C-க்கும் அதிகமாகப் பதிவாகி வருகிறது. இந்த கடும் வெப்பத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உடல்நலச் சிக்கல்களைத் தவிர்க்கத் தமிழ்நாடு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஓ.ஆர்.எஸ் கரைசல்
ஓ.ஆர்.எஸ் கரைசல்

வெப்ப அலையினால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை தடுக்க, அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ். (ORS) கரைசல் இலவசமாக வழங்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்குத் தேவைப்படும்போது இந்த நிலையங்களை அணுகிப் பெற்றுக்கொள்ளலாம். போதிய அளவில் கையிருப்பு வைக்க அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்ப அதிர்ச்சி அல்லது 'ஹீட் ஸ்ட்ரோக்' (Heat Stroke) பாதிப்புக்குள்ளாகும் நபர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க, அரசுப் பொது மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகளைத் தவிர்க்கவும், அவசர காலச் சிகிச்சைகளை விரைந்து வழங்கவும் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரம், கடைகளில் பாட்டில்கள் மற்றும் கேன்களில் 'ORS' என்ற பெயரில் விற்கப்படும் பல பானங்கள் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதில்லை என்றக் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. எனவே, ORS கரைசல் குறித்தும், அதன் பலன் குறித்தும், பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை குறித்தும் விரிவாகப் பேசியிருக்கிறார், அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் டாக்டர் சாய் சுரேந்தர்.

வாட்டும் வெப்ப அலை... தப்பிப்பது எப்படி?

நம்மிடம் பேசிய டாக்டர், ``நமது மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் (Hypothalamus) என்ற பகுதிதான் உடலின் வெப்பநிலையைச் சீராக வைக்கும் ஒரு 'தெர்மோஸ்டாட்' கருவி போலச் செயல்படுகிறது. மனித உடலின் இயல்பான வெப்பநிலை 98.4°F (37°C). நாம் கடும் வெயிலில் நீண்ட நேரம் இருக்கும்போது, உடலின் அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் (BMR) எகிறுகிறது. ஒரு கட்டத்தில், இந்த ஹைப்போதலாமஸ் தன் கட்டுப்பாட்டை இழந்து, உடல் வெப்பநிலை 104°F முதல் 106°F வரை எகிறிவிடும். உடல் வெப்பநிலை 104°F-ஐத் தாண்டும்போது உடல் உறுப்புகள் 'வெந்து' போவது போன்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அதீத வெப்பத்தால் இதயம் திடீரெனத் துடிப்பதை நிறுத்த வாய்ப்பு அதிகம்.

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு என்பது ஒருவருக்கு மின்சார ஷாக் அடித்தால் என்ன பாதிப்பு ஏற்படுமோ, அதே போன்ற பாதிப்பை உடலின் உட்புறச் செயல்பாடுகளில் ஏற்படுத்துகிறது. வெளியில் உடல் கருகியிருக்காது, ஆனால் உள்ளுக்குள் இருக்கும் திசுக்கள் மற்றும் உறுப்புகள் கடுமையான சேதத்தைச் சந்திக்கும்.

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புடன் ஒரு நோயாளி வரும்போது, மருத்துவர்கள் காலத்தோடு போராடுகிறார்கள். அந்த 5 முதல் 10 நிமிடங்களுக்குள் வெப்பத்தைக் குறைக்கவில்லை என்றால் உயிர் பிழைப்பது கடினம்.

அதனால் ஹீட் ஸ்டோக் பாதித்தவருக்கு ரத்தக் குழாய் வழியாகச் செலுத்தப்படும் சலைன் (Saline) திரவத்தை நேரடியாக உடலுக்குள் செலுத்தி வெப்பத்தைக் குறைக்க முயல்வார்கள். இதயம் நின்ற நிலையில் வருபவர்களுக்குச் செயற்கை சுவாசமும், CPR கொடுத்தும் உயிரை மீட்கப் போராடுவார்கள்.

தலைமை அவசர சிகிச்சை மருத்துவர் சாய் சுரேந்தர்
அவசர சிகிச்சை மருத்துவர் சாய் சுரேந்தர்

ORS என்பது Oral Rehydration Salts என்பதன் சுருக்கமாகும். இது நீர், உப்பு மற்றும் சர்க்கரை கலந்த ஒரு உயிர் காக்கும் கலவை. உடலில் நீர்ச்சத்து குறையும்போது, அதனை உடனடியாக ஈடுசெய்ய இது உதவுகிறது. அதில் உள்ள ஒவ்வொரு தாதுப்பொருளும் உடலின் செயல்பாட்டைச் சீராக வைக்க ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்கிறது.

சோடியம்: இது உடலின் நீர்ச்சத்தைத் தக்கவைக்கும் மிக முக்கியமான காரணியாகும். வியர்வையாலோ அல்லது வயிற்றுப்போக்காலோ உடல் இழந்த நீர்ச்சத்தை மீண்டும் ரீடைன் செய்ய சோடியம் உதவுகிறது.

பொட்டாசியம்: இது எலக்ட்ரோலைட் இழப்பைத் தடுக்கிறது. குறிப்பாக, செல்களுக்கு உள்ளே இருக்கும் பொட்டாசியம் அளவு குறையாமல் பார்த்துக்கொள்வதன் மூலம், நரம்பு மற்றும் தசை செயல்பாடுகளைப் பாதுகாக்கிறது.

குளோரைடு: நமது உடலில் உள்ள திரவங்களின் சமநிலையை பராமரிக்க குளோரைடு அவசியம். இது உடலில் அமில-காரத் தன்மையைச் சீராக வைக்க உதவுகிறது.

குளுக்கோஸ்: இது உடலுக்கு உடனடி ஆற்றலை அளிப்பதோடு மட்டுமல்லாமல், சோடியமும் தண்ணீரும் குடலால் விரைவாக உறிஞ்சப்படுவதற்கும் ஒரு ஊக்கியாகச் செயல்படுகிறது.

வெப்ப அலை
வெப்ப அலை

சிட்ரேட் மற்றும் பைகார்பனேட் (Citrate & Bicarbonate): இவை உடலில் அமில அளவு அதிகரித்துவிடாமல் கட்டுப்படுத்துகின்றன. குறிப்பாகத் தீவிர நீர்ச்சத்து இழப்பின் போது ஏற்படும் 'மெட்டபாலிக் அசிடோசிஸ்' போன்ற நிலைகளைத் தவிர்க்க இவை உதவுகின்றன.

பொதுவாகத் தீவிரமான வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுக்கு உடலில் இருந்து வெளியேறும் திரவத்தை ஈடுசெய்ய இது வழங்கப்படுகிறது. ஆனால், தற்போது நிலவும் அதீத வெப்ப சூழலில், ஹீட் ஸ்டோக் மற்றும் உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க இது ஒரு மிகச்சிறந்த தீர்வாக பரிந்துரைக்கப்படுகிறது. உடலில் நீர்ச்சத்து முழுமையாக வற்றி, வெப்பம் கட்டுக்கடங்காமல் போகும்போது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கும். இத்தகைய அவசரக் காலங்களில், ஓ.ஆர்.எஸ் கரைசல் குடிப்பதன் மூலம் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, இதயம் மற்றும் மூளைக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முடியும்.

இளநீர்

ஓ.ஆர்.எஸ் கரைசல் பொடியை ஒரு லிட்டர் குடிநீரில் கலந்து ஒரு நாள் முழுவதும் குடித்து வரலாம். ஒருமுறை தயாரித்த கரைசலை 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். குழந்தைகளுக்கும் இந்தக் கரைசலை 1 - 2 டீஸ்பூன் அளவில் அடிக்கடி கொடுக்கலாம். சிலர் ஓ.ஆர்.எஸ் பொடியை பால், ஜூஸ், குளிர்பானங்களில் கலந்து குடிக்கிறார்கள். அப்படிக் குடிக்கக் கூடாது. அதேபோல கரைசலை சூடுபடுத்தவும் கூடாது. ஓ.ஆர்.எஸ் கரைசலை மட்டுமே முழுவதுமாக நம்பி இல்லாமல், தயிர், மோர், இளநீர், போதுமான தண்ணீர் என உடலை ஹைட்ரேட்டாக வைத்துக்கொள்வது அவசியம்.

சந்தையில் கிடைக்கும் ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் மீது உங்களுக்குத் தயக்கம் இருந்தாலோ அல்லது அவசரத் தேவைக்குக் கிடைக்கவில்லை என்றாலோ, நீங்களே உங்கள் வீட்டிலேயே பாதுகாப்பான முறையில் ஓ.ஆர்.எஸ் கரைசலைத் தயாரிக்க முடியும்.

1 லிட்டர் சுத்தமான குடிநீரை எடுத்துக்கொள்ளவும் (சுத்திகரிக்கப்பட்ட அல்லது காய்ச்சி ஆறவைத்த நீர் சிறந்தது). அதில் 6 டீஸ்பூன் சர்க்கரை, அரை டீஸ்பூன் உப்பைச் சேர்க்கவும். சர்க்கரையும் உப்பும் நீரில் முழுமையாகக் கரையும் வரை நன்றாகக் கலக்க வேண்டும். சர்க்கரை அல்லது உப்பு அடியில் தங்கிவிடக் கூடாது. தேவைப்பட்டால் மிக்ஸியில் ஒருமுறை அடித்துக்கூட முழுமையாகக் கரைக்கலாம். (இது ஒரு லிட்டர் நீருக்கான கரைசல்)

ஓ.ஆர்.எஸ் கரைசல்
ஓ.ஆர்.எஸ் கரைசல்

வீட்டில் தயாரிக்கப்படும் இந்த கரைசலில் குளுக்கோஸ், சோடியம் இருப்பதால், உடனடி நீர்ச்சத்து இழப்பை இது ஈடுகட்டும். நம்மால் நேரடியாகத் தயாரிக்கப்படுவதால் எந்தப் பயமுமின்றிப் பருகலாம். மருந்துக்கடைகளில் கிடைக்கும் பாக்கெட்டுகளில் சோடியம் மற்றும் குளுக்கோஸுடன் சேர்த்து பொட்டாசியம், குளோரைடு போன்ற கூடுதல் தாதுக்களும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருக்கும்.

வெப்ப அலை வீசும் காலத்தில் நீர்ச்சத்து இழப்பு மட்டுமன்றி, உணவு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த வேறு சில ஆபத்துகளும் இருக்கின்றன. வெப்பம் அதிகமாக இருக்கும்போது உணவுகள் மிக விரைவாகக் கெட்டுவிடும். காலையில் சமைத்த உணவுகள் மதியத்திற்குள்ளேயே பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. இதனால், வெளியே சாப்பிடும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கெட்டுப்போன உணவுகளால் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் அதிகம். இத்தகைய சூழலில், உடலில் இருந்து வெளியேறும் சோடியம் மற்றும் பொட்டாசியத்தை ஈடுசெய்ய வீட்டில் தயாரித்த ORS கரைசலை உடனே எடுத்துக்கொள்ள வேண்டும்.

பாம்புகள்
பாம்புகள்

கோடை காலத்தில் பூமியின் உட்புறம் வெப்பம் அதிகரிப்பதால், நிலத்தடியில் வாழும் பாம்புகள் மற்றும் தேள்கள் குளிர்ச்சியைத் தேடி வெளியே வரத் தொடங்கும். கிராமப்புறங்களில் மட்டுமின்றி, சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் (Peripheral belts) இதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, புதர் நிறைந்த பகுதிகள் மற்றும் திறந்தவெளிகளில் நடமாடும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை.

எனவே, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும். உடல் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் தளர்வான காட்டன் ஆடைகளை (Cotton clothes) அணியவும். வெளியே செல்ல நேர்ந்தால் சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும். தாகம் எடுப்பதற்கு முன்பே நீர் மற்றும் ஓ.ஆர்.எஸ் (ORS) கரைசலை அருந்தி உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது ஒன்றே உயிர் காக்கும் வழியாகும்." என்றார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...