Skip to main content

Doctor Vikatan: சலூன்களில் பயன்படுத்தும் டிரிம்மர், இன்ஃபெக்ஷனை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: சலூன்களில் இப்போதெல்லாம் ஒரே டிரிம்மரை எல்லோருக்கும் பயன்படுத்துகிறார்கள். இதனால் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா... இந்த விஷயத்தைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி வலியுறுத்துவது?
-எஸ்.கீர்த்திவர்மன், புதுச்சேரி

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சருமநல மருத்துவர் பூர்ணிமா.
சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சலூன்களில் பயன்படுத்தும் டிரிம்மர்களில் உள்ள பிளேடுகள் மாற்றக்கூடியவை அல்ல. இவை சருமத்தின் அடியில் ஊடுருவிச் செல்பவையும் (Non-invasive) அல்ல. முடியின் நீளத்தை மட்டுமே குறைக்கக்கூடியவை. ஷேவிங் செய்யப் பயன்படும் பிளேடுகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு மாற்றப்படுபவை. ஆனால், டிரிம்மர்கள் அப்படிப்பட்டவை அல்ல.

சலூன்களில் உங்களுக்குப் பயன்படுத்தும் டிரிம்மர்களை முறையாகச் சுத்தம் செய்கிறார்களா (Sanitization) என்று கவனியுங்கள். டிரிம்மர்களை ஆல்கஹால் ஸ்பிரே (Alcohol sprays) கொண்டு நன்கு சுத்தப்படுத்தி, துடைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். இதை உறுதி செய்யுங்கள். 

ஒருவேளை கழற்றி மாட்டக்கூடிய  மாடல் என்றால், கத்தரிக்கோல்களைச் சுத்தப்படுத்துவது போலவே, டிரிம்மர்களையும் புற ஊதாக்கதிர் சிகிச்சை (UV treatment) மூலம் கிருமி நீக்கம் செய்யலாம்.

அப்படிச் செய்கிறார்களா என்றும் பாருங்கள். கிருமி நீக்கம் செய்வதற்கு முன்பாக, சிறிய பிரஷ் கொண்டு பிளேடுகளுக்கு இடையில் சிக்கியுள்ள முடிகளை அகற்ற வேண்டும்.  

டிரிம்மர்களை ஆல்கஹால் ஸ்பிரே (Alcohol sprays) கொண்டு நன்கு சுத்தப்படுத்தி, துடைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.

டிரிம்மர்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை என்பதால், அவை முறையாக கிருமி நீக்கம் செய்யப்படுகின்றனவா என்பதை நாம் நிச்சயம் சரிபார்க்க வேண்டும்.

பிளேடுகளில் ஏதேனும் உடைந்திருந்தாலோ அல்லது துருப்பிடித்து இருந்தாலோ அதைப் பயன்படுத்த வேண்டாம் என உறுதியாகச் சொல்லுங்கள். இப்படிப்பட்ட கருவிகள், உங்கள் சருமத்தில் கீறல்களை ஏற்படுத்தி பாதிப்பை உண்டாக்கலாம்.  

சலூன்களில் மட்டுமல்ல, பியூட்டி பார்லர்களில் பயன்படுத்தும் சீப்பு, பிரஷ், பெடிக்யூர், மெனிக்யூர் செய்யும் உபகரணங்கள் என அனைத்தையும் முறையாக ஸ்டெரிலைஸ் செய்துதான் பயன்படுத்துகிறார்களா என்பதை எல்லோரும் கவனிக்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...