Skip to main content

Doctor Vikatan: தூக்கத்தில் பேசுவது என்பது மனநோய் பாதிப்பின் அறிகுறியா?

Doctor Vikatan: என் உறவினரின் குழந்தைக்கு 10 வயதாகிறது. தினமும் தூக்கத்தில் பேசும் வழக்கம் இருக்கிறது. இது பிற்காலத்திலும் தொடருமா... தூக்கத்தில் பேசுவது என்பது மனநோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மிதுன் பிரசாத்.

மனநல மருத்துவர் மிதுன் பிரசாத்
மனநல மருத்துவர் மிதுன் பிரசாத்

தூக்கத்தில் பேசுவதை மனநல மருத்துவத்தில் 'சாம்னிலோகுய்' (Somniloquy) என்று சொல்கிறோம். இது மனநோய் அல்ல... மாறாக, தூக்கத்தில் ஏற்படும் ஒரு சாதாரண மாறுபாடாகும். அதை 'பாராசோம்னியா' (Parasomnia) என்கிறோம். இந்தப் பிரச்னை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

தூக்கத்தில் பேசும் வழக்கமானது பொதுவாக சில விநாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும். தூக்கத்தில் இருப்பவர்கள் சம்பந்தமில்லாத வார்த்தைகளையோ அல்லது யாரிடமோ உரையாடுவது போன்றோ பேசலாம். தூக்கத்தில் பேசியது அடுத்த நாள் காலையில் அவர்களுக்கு ஞாபகம் இருக்காது. 

மற்றவர்கள் சொன்னால் மட்டுமே தெரியவரும். பெரும்பாலும் இது ஆபத்தான, பெரிய பிரச்னையே அல்ல. ஆனால், பின்வரும் நிலைகளில் கவனம் தேவை.

அதாவது, தூக்கத்தில் பேசுவது என்பது அடிக்கடி நிகழும்போது, தூக்கத்தில் அதிக சத்தத்துடன் கத்துவது அல்லது பயப்படுவது (Night Terrors), தூக்கத்தில் பேசுவதோடு, தூக்கத்தில் நடக்கும் பழக்கமும் (Sleep Walking) சேர்ந்து இருப்பது, பகல் நேரத்தில் அதிக சோர்வாகவோ அல்லது தூக்க கலக்கத்துடனோ இருப்பது, அதிக மன அழுத்தம் அல்லது பதற்றம் இருக்கும்போது... மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.  ஆரம்ப நிலையில், அடிப்படையான சில விஷயங்களை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். 

சரியான தூக்கம் இல்லாதவர்கள் என்றால் குறைந்தது 6 முதல் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். முறையான தூக்கம் தடைப்படும்போது இந்தப் பிரச்னை வரலாம். காய்ச்சல் அல்லது உடல்நலக்குறைவு (குறிப்பாக குழந்தைகளுக்கு) ஏற்படும்போதும் வரலாம். இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சைகள் தேவைப்படுவதில்லை. ஆனாலும், பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து சிலருக்குச் சிகிச்சை தேவைப்படலாம். 

சரியான தூக்கம் இல்லாதவர்கள் என்றால் குறைந்தது 6 முதல் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
சரியான தூக்கம் இல்லாதவர்கள் என்றால் குறைந்தது 6 முதல் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்.

அதாவது, தூக்கத்தில் பேசுவது உங்கள் தூக்கத்தைப் பாதித்தாலோ, மறுநாள் காலை எழுந்ததும் களைப்பாக உணர்கிறீர்கள் என்றாலோ மருத்துவ ஆலோசனை அவசியம். நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்கள் என்றால், காலை ஷிஃப்ட்டில் வேலை பார்க்க முடியுமா என யோசிக்கலாம். ஸ்ட்ரெஸ் இருந்தால் அதைத் தவிர்ப்பதற்கான வழிகளை யோசிக்க வேண்டும். 

தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். தூங்குவதற்கு முன் போன் அல்லது டிவி பார்ப்பதைத் தவிர்க்கவும். தூங்குவதற்கு முன் இரண்டு நிமிடங்கள் எளிய மூச்சுப்பயிற்சி அல்லது ரிலாக்சேஷன் பயிற்சிகளைச் செய்யலாம்.

தூங்குவதற்கு முன் வயிறு முட்ட உண்பதைத் தவிர்க்கவும். இந்த எளிய விஷயங்களைப் பின்பற்றியும் பிரச்னை சரியாகவில்லை என்றால்,  மருத்துவரை அணுகுவது நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...