Skip to main content

Doctor Vikatan: வழக்கமான சோடாவுக்கு மாற்றாகுமா டயட் சோடா... அது ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: நான் முன்பெல்லாம் அடிக்கடி சோடா குடித்துக்கொண்டிருந்தேன். செரிமான பிரச்னை வந்தால் உடனே சோடா குடித்துவிடுவேன். ஆனால், அது தவறானது என்று சொல்லி என் நண்பன் டயட் சோடாவை அறிமுகப்படுத்தினான்.

அப்போதிலிருந்து டயட் சோடாவுக்கு மாறிவிட்டேன். சாதாரண சோடாவைவிட அது பெட்டரானதுதானே...?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன். 

சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

கலோரியே கிடையாது என்ற அறிவிப்புடன் வருகிறது டயட் சோடா. அதனால் வழக்கமான இனிப்பு சேர்த்த குளிர்பானங்களுக்குப் பதிலாகப் பலரும் டயட் சோடாவைத் தேர்வு செய்கிறார்கள்.

பருமன், சர்க்கரைநோய், இதயநோய்கள் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணத்திலும் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்களும் டயட் சோடாவை மாற்றாக நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் நினைப்பது உண்மையல்ல.

வழக்கமான இனிப்பு சேர்த்த கார்போனேட்டடு பானங்களை விடவும் டயட் சோடா மற்றும் டயட்பானங்கள் ஆபத்தானவை. இவை இனிப்பு உணவுகளின் மீதான தேடலை அதிகரித்து அதன் தொடர்ச்சியாக உடல் பருமன், டைப்-2 டயாபட்டீஸ் போன்றவற்றுக்கும் காரணமாகலாம்.

டயட் சோடாவில் மிக அதிக அளவு செயற்கை இனிப்பு சேர்க்கப்படும். இந்த அளவவானது நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் இனிப்பின் அளவைவிட பல மடங்கு அதிகம். இந்தச் செயற்கை இனிப்பு உங்கள் உடலை ஏமாற்றி அதிக அளவு இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இன்சுலின் சுரப்பு அதிகரித்தால் வயிற்றுப் பகுதியைச் சுற்றி கொழுப்பு அதிகமாவதுடன் உடல் எடையும் கூடும்.

இந்த வகை பானங்கள் உங்கள் உடலைக் குழப்புவதால் உடலின் வளர்சிதைமாற்ற அளவும் குறையும், எனவே உங்கள் உடல் தினமும்  எரிக்கும் ஆற்றலின் அளவும் குறையும்.

கொழுப்பு
கொழுப்பு

அடிக்கடி டயட் சோடா உள்ளிட்ட டயட் பானங்களை அருந்துபவர்களுக்கு வழக்கத்தைவிட சீக்கிரமே பசியெடுக்கும். உணவின் மீதான தேடல் அதிகரிக்கும் குறிப்பாக அரிசி, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளின் மீதான தேடல் அதிகரிக்கும்.

அடிக்கடி டயட் சோடா குடிப்பவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பும் பற்சிதைவும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, நீங்கள் அருந்தும் இனிப்பு சேர்த்த பானங்களுக்கு மாற்றாக டயட் சோடாவை நினைக்க வேண்டாம். அதற்கு பதில் பிளாக்  டீ, ஹெர்பல் டீ, சர்க்கரை சேர்க்காத ஃப்ரெஷ் ஜூஸ், இளநீர் மற்றும் மோர் போன்றவற்றை அருந்தலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...