Skip to main content

Doctor Vikatan: டீன் ஏஜ் மகளுக்கு ரத்தச்சோகை... 7-ஆகக் குறைந்த ஹீமோகுளோபின்; என்னதான் தீர்வு?

Doctor Vikatan: என் மகளுக்கு 16 வயதாகிறது. அவளுக்குத் தீவிரமான ரத்தச்சோகை பிரச்னை இருக்கிறது. ரத்தப் பரிசோதனை செய்ததில் ஹீமோகுளோபின் அளவு 7 என்று காட்டுகிறது. இது மிகவும் மோசமான நிலை என்கிறார் மருத்துவர்.

நாங்கள் அசைவம் சாப்பிடுவதில்லை என்பதால், உணவின் மூலமும் ஈடுகட்ட முடியவில்லை. இந்த வயதிலேயே இரும்புச்சத்தை அதிகரிக்கும் மருந்துகள் கொடுப்பது சரியானதா... அவளது ரத்தச்சோகை பிரச்னையைக் குணமாக்க என்னதான் தீர்வு?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

உங்கள் மகளின் மாதவிடாய் சுழற்சி எப்படியிருக்கிறது, மாதந்தோறும் வெளியேறும் ரத்தம் அதிகமாக இருக்கிறதா என்ற தகவல் இல்லை. ஒரு பெண் வயதுக்கு வரும்போது அவளின் மாதவிடாய் சுழற்சி முறையற்று இருக்கும்.

அதாவது தொடர்ந்து 20 நாள்கள்வரை ரத்தப் போக்கு இருக்கலாம் அல்லது இரண்டு, இரண்டரை மாதங்களுக்கொரு முறை பீரியட்ஸ் வரலாம். சிலருக்கு அதிக ரத்தப்போக்கு இருக்கலாம். வயதுக்கு வந்த அடுத்த ஒன்றிரண்டு வருடங்களில் இவையெல்லாம் ஒழுங்குக்கு வரும்.

பீரியட்ஸ் நாள்களில் ஒரு பெண்ணுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து அனீமியா எனப்படும் ரத்தச்சோகை வராமலிருக்க நல்ல சத்துள்ள ஆகாரங்களைக் கொடுக்க வேண்டும்.

தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரும்புச்சத்து சப்ளிமென்ட்டுகளையும் கொடுக்கலாம். அதைக் கொடுப்பதில் எந்தப் பிரச்னையும் வராது. ஹீமோகுளோபின் இவ்வளவு குறைவாக இருந்தால், உங்கள் மகள் சோர்வாக உணர்வார்... படிப்பிலும் கவனம் செலுத்த முடியாது.

உங்கள் மகளுக்கு ஹார்மோனல் இம்பேலன்ஸ் இருக்கிறதா என்பதையும் உறுதிபடுத்துங்கள். ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவுகள் சரியாக இல்லாமலிருக்கலாம். அதற்கு காரணம் சினைப்பைகளின் முறையற்ற இயக்கம்.

பாலிசிஸ்டிக் ஓவரீஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருக்கலாம். உங்கள் மகளின் லைஃப்ஸ்டைல் சரியில்லாமல், அதாவது ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் சாப்பிடுபவராக இருக்கலாம். அடிக்கடி வெளியில் சாப்பிடுபவராக இருக்கலாம். பருமன் பிரச்னை அல்லது தைராய்டு பிரச்னை இருக்கலாம். அவருக்கு ப்ளீடிங் டிஸ்ஆர்டர் (bleeding disorder) இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.

பல் தேய்க்கும்போது ஈறுகளில் ரத்தக் கசிவு,  எங்கேயாவது அடிபட்டால் அந்தக் காயம் ஆறுவதற்கு நேரமெடுப்பது போன்றவை இருந்தால் ரத்தப் பரிசோதனைகளின் மூலம் அதை உறுதி செய்யலாம்.

உங்கள் மகளுக்கு ஹீமோகுளோபின் அளவு 7 என்றிருப்பதால் ப்ளீடிங்கும் அதிகமிருக்கும்.
உங்கள் மகளுக்கு ஹீமோகுளோபின் அளவு 7 என்றிருப்பதால் ப்ளீடிங்கும் அதிகமிருக்கும்.

ஒருவேளை பீரியட்ஸின்போது ப்ளீடிங் அதிகமாக இருந்தால், முதல்கட்ட சிகிச்சையாக ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி மருந்துகள் கொடுக்க வேண்டும். இவை வலியையும் அதிக ப்ளீடிங்கையும் ஓரளவு கட்டுப்படுத்தும். அடுத்து ஹார்மோன்கள் கலக்காத மருந்துகள் கொடுத்து ப்ளீடிங்கைக் கட்டுப்படுத்தலாம்.

அதிலும் குணம் தெரியாவிட்டால் ஹார்மோன் மருந்துகள் கொடுக்க வேண்டி வரலாம். பருமன் அதிகமிருந்தால் எடையைக் குறைக்க வேண்டும். உங்கள் மகளுக்கு ஹீமோகுளோபின் அளவு 7 என்றிருப்பதால் ப்ளீடிங்கும் அதிகமிருக்கும். இது ஒரு சுழற்சி மாதிரி. இதை ஏதோ ஓரிடத்தில் நாம் நிறுத்த வேண்டும். அதற்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். 

தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் ஏதேனும் உடற்பயிற்சிகள் செய்யச் சொல்லுங்கள். மூன்று வேளைகளும் வீட்டில் சமைக்கிற சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் எனச் சத்தாகச் சாப்பிட வையுங்கள். அனீமியா குணப்படுத்தப்படாவிட்டால் நிச்சயம் இன்ஃபெக்ஷன் வரும்.

அடிக்கடி உடல்நலம் பாதிக்கும். எனவே, முதல் வேலையாக அதைச் சரிசெய்யும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இந்தப் பிரச்னையை அலட்சியமாக நினைக்கக்கூடாது. எந்தக் காரணத்தால் ஹீமோகுளோபின் குறைந்தது என்பதைக் கண்டுபிடித்து, அதற்கேற்ற சிகிச்சையைக் கொடுக்க வேண்டியது மிகமிக முக்கியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...