Skip to main content

Weight Loss டயட்டை தொடர முடியலையா? - மூளையோட வேலைதான் காரணம்!

வெயிட் லாஸ் செய்ய வேண்டும் என்ற முடிவோடு உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பார்கள். ஆரம்ப நாள்களில், 'அதைச் சாப்பிட மாட்டேன்', 'இதை அதிகம் சாப்பிட வேண்டும்', 'இவ்வளவு தான் சாப்பிடுவேன்' என ஸ்டிரிக் ஆபிசராக மாறி டயட்டை கடைப்பிடிப்பார்கள். சில நாள்களிலேயே டயட்டை பின்பற்ற முடியாமல் மீண்டும் பழைய பழக்கத்துக்கே சென்றுவிடுவார்கள்.

வெயிட் லாஸ் டயட்

இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் நமது மூளையின் செயல்பாடுகளும் முக்கியக் காரணங்களாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். "எடை இழப்புக்கான டயட்டை கைவிடுவதற்குப் பின்னால் ஒரு வலுவான நரம்பியல் காரணம் உள்ளது என்பது உண்மையே. ஒரு புதிய டயட்டை மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கி, சில நாள்களிலேயே அதைக் கைவிடுவது என்பது பலரும் அனுபவிக்கும் பொதுவான சவால்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன்.

இது பற்றி மேலும் விளக்குகையில், "இது வெறும் மன உறுதி (Willpower) சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, இதன் பின்னணியில் சிக்கலான நரம்பியல் மற்றும் உளவியல் காரணிகள் உள்ளன. நமது மூளை உணவை எப்படி ஒரு வெகுமதியாகக் கருதுகிறது, சுயக்கட்டுப்பாட்டை எப்படிப் பயன்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம், டயட்டை பின்பற்றுவதில் உள்ள சிக்கல்களைத் தெளிவாக அறிய முடியும்.

brain

நமது மூளை உடலைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உடல் எடை குறைய ஆரம்பித்தால் மூளை அதை ஓர் அபாயம் என்று உணரும். இதனால் மூளை ஆற்றலை சேமிக்கும் மோடுக்கு மாறும். மேலும், பசியை அதிகரிக்கும் ஹார்மோன்கள் அதிகரிக்கும், வளர்சிதை மாற்றம் எனப்படும் மெட்டபாலிசம் குறையும். இதனால் கிரேவிங்ஸ் அதிகரித்து, அதிகமாக சாப்பிடத் தோன்றலாம். உணவுக் கட்டுப்பாட்டை இழக்கவும் நேரிடலாம். இதை மனவலிமைக் குறைவு என்று நினைக்க வேண்டாம். இது உயிரியல் எதிர்வினைதான் (Biological Response).

நமது மூளையில் ரிவார்ட் சிஸ்டம் (Reward System) என்று ஒரு பகுதி உள்ளது. நமக்குப் பிடித்தமான உணவைச் சாப்பிடும்போது டோபமைன் ஹார்மோன் ரிலீஸ் ஆகிறது. இது ஒரு மகிழ்ச்சியான உணர்வைத் தரும். ஆனால், கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றும்போது இந்த ரிவார்ட் குறைகிறது. அதே போல, நம்முடைய பழைய உணவுப்பழக்கம் நமது மூளையின் நரம்பியல் பாதையில் வலுவாகப் பதிந்திருக்கும். அதை மாற்றி புதிய பழக்கங்களை உருவாக்கிப் பின்பற்ற சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகலாம். இதனால் ஆரம்ப நாள்களில் டயட்டை தொடர்ந்து சீராகப் பின்பற்றுவது சிரமமாக இருக்கும்.

diet

உணவுக்கட்டுப்பாட்டைத் தொடர்ச்சியாகப் பின்பற்ற முடியாதது என்பது தனிப்பட்ட ஒரு நபரின் பலவீனம் அல்ல. நொறுக்குத் தீனிகள், இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும் என்று தூண்டப்படும் அதீத ஆசை’, நாள் முழுவதும் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதால் ஏற்படும் மன அழுத்தம், டயட்டில் ஏதேனும் சிறிய தவறு செய்துவிட்டால், அதை ஒரு பெரிய தோல்வியாக கருதும் உளவியல் விளைவு ஆகியவை, இந்தப் போராட்டத்தை மேலும் சிக்கலாக்குகின்றன.

சிலரால் மட்டும் எப்படி முடிகிறது?

இதற்குப் பின்னால் இருக்கும் முக்கியக் காரணம் நியூரோபிளாஸ்டிசிட்டி (Neuroplasticity) எனும் மூளையைத் தகவமைத்துக் கொள்ளும் திறன். அதாவது, மூளையில் பல்வேறு நரம்பியல் இணைப்புகள் இருக்கும். டயட்டை பின்பற்றும்போது சிலர் எடுத்த உடனே கடுமையான உணவுமுறைகளைக் கடைப்பிடிக்காமல், மெதுவாகவும் பொறுமையாகவும் மாற்றங்களைச் செய்கிறார்கள். தொடர்ந்து ஆரோக்கியமான நடத்தைகளை கடைப்பிடிப்பதன் மூலம், மூளையில் புதிய நரம்பியல் இணைப்புகள் உருவாகின்றன. காலப்போக்கில் இந்த ஆரோக்கியமான நடத்தைகள் நிரந்தரமான பழக்கவழக்கங்களாக மாறிவிடுகின்றன.

Dr. Prabash Prabhakaran

டயட்டை பின்பற்ற என்ன செய்யலாம்?

இந்த நரம்பியல் சார்ந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு, குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல், டயட்டை பின்பற்ற சில உத்திகளைப் பின்பற்றலாம். அதாவது, பார்க்கும் இடத்தில் பழங்கள், நட்ஸ், சாலட் தயாரிக்கத் தேவையானவை போன்ற ஆரோக்கிய உணவுகளை வைத்திருக்கலாம். பிஸ்கெட், சிப்ஸ் போன்ற ஆரோக்கியத்துக்கு எதிரானவைகளை வாங்காமல் தவிர்த்துவிடுங்கள் அல்லது கண்ணுக்குத் தெரியாத இடத்தில் வைத்துவிடுங்கள்.

வாராந்திர உணவுத் திட்டத்தை முன்பே தயாரித்து, அதற்கான பொருள்களை வாங்கி வைத்துவிடலாம். உணவு நேரம் தவிர, பசிக்கும்போது சாப்பிடுவதற்கு ஆரோக்கியமான தேர்வுகள் என்ன இருக்கிறது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு வாங்கி வைத்துவிடலாம். ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறைக்க வேண்டும் என்பதுபோல கடின இலக்குகளை நிர்ணயிக்காமல், 'முதலில் ஃபிட்னஸை மேம்படுத்தலாம், அதன் பிறகு எடைக் குறைப்பைப் பற்றி தீர்மானிக்கலாம்' என்பது போல அடையக்கூடிய எதார்த்தமான, சிறிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்.

weight loss diet

தொடர் முயற்சி தேவை...

உணவுக் கட்டுப்பாடு, வெயிட் லாஸ் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதுதான் (Consistency) முக்கியமே தவிர, 'பெர்ஃபெக்ஷன்' (Perfection) அல்ல. இன்னைக்கு ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுட்டேன். டயட் கெட்டுப்போச்சு என்று வருந்துவதைவிட, ஏழு நாள்களில் ஐந்து நாள்கள் தொடர்ந்து டயட்டை பின்பற்றுவது சிறந்தது. ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்பதற்காக, அன்றைய தினம் உடற்பயிற்சியையே சிலர் தவிர்ப்பார்கள். அதற்கு பதில் அரை மணி நேரம் உடற்பயிற்சியாவது செய்வது நல்லது. தொடர் முயற்சிகளில் ஈடுபட்டால், 'பெர்ஃபெக்ஷன்' தானாக வந்துவிடும்" என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...