Skip to main content

Doctor Vikatan: சோயா உணவுகள் சாப்பிடும் ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி அதிகரிக்குமா?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் அடிக்கடி சோயா உணவுகள் சமைப்பது வழக்கம். சோயா சங்க்ஸ் சேர்த்த பிரியாணி, கிரேவி, சோயா சுண்டல் என ஏதேனும் ஒன்று இருக்கும். ஆண் குழந்தைகளுக்கு சோயா உணவுகள் கொடுத்தால், அவர்களுக்கு மார்பக வளர்ச்சி அதிகரிக்கும் என்று சமீபத்தில் ஒரு தகவல் கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்

அம்பிகா சேகர்
அம்பிகா சேகர்

மனித உடலுக்குத் தேவையான 9 முக்கியமான அமினோ அமிலங்களும் (Essential Amino Acids) சோயாவில் இருப்பதால், அது ஒரு முழுமையான புரதச்சத்தாக (Complete Protein) கருதப்படுகிறது.

சாதாரண பருப்பு வகைகளில் 100 கிராமிற்கு 20 முதல் 25 கிராம் வரை மட்டுமே புரதம் இருக்கும். ஆனால், சோயாவில் 100 கிராமிற்கு 40% முதல் 43% வரை புரதச்சத்து நிறைந்துள்ளது.

சோயாவில் ஃபிளேவனாய்டு (Flavonoid) எனப்படும் ஒருவகை புரதச்சத்து உள்ளது. இதில் ஈஸ்ட்ரோஜென் அதிகப்படியாக இருப்பதால், இது உடலுக்கு மிகவும் நல்லது. சோயாவில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புச் சத்துகள் மற்றும் இரும்புச் சத்துகள் அதிக அளவில் உள்ளன.

இந்தக் காரணங்களால்தான் மற்ற பருப்பு வகைகளைவிட சோயா சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. அசைவ உணவுகளான மட்டன் போன்றவற்றில் கிடைக்கும் புரதத்தைவிட, சோயாவில் மிக உயர்தரமான புரதம் (Good Quality Protein) அதிக அளவில் கிடைக்கிறது.

மெனோபாஸ் (Menopause) காலகட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு இது உடலில் ஏற்படும் அதிகப்படியான சூட்டைத் தணிப்பதுடன், இதில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜென், ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது. 

மார்பகப் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் நோயை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான புரதச்சத்தை சோயா தாராளமாக வழங்குகிறது. ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை (Sperm count) அதிகரிக்கவும், ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்யவும் சோயா உதவுகிறது.

சோயா பனீர்
சோயா பனீர்

சோயா உணவுகளைக் காலையில் எடுத்துக்கொள்வது சிறந்தது. நன்றாக வேகவைத்தோ அல்லது முளைக்கட்டியோ சாப்பிடலாம். சோயா சங்க்ஸ் (Soya Chunks) வடிவிலும் எடுத்துக்கொள்ளலாம். இதில் புரதம் மற்றும் கொழுப்புச் சத்துகள் அதிகமாக இருப்பதால், செரிமானம் ஆக சிறிது நேரம் எடுக்கும். எனவே, இரவில் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இது  வயிற்றுப்போக்கை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

சோயாவை ஊறவைத்து அரைத்து அதன் பாலைப் பயன்படுத்தலாம். தற்போது கடைகளில் டெட்ரா பேக்குகளில் (Tetra pack)  சோயா மில்க் கிடைக்கிறது. வாரத்தில் இரண்டு நாள்கள் சோயாவிலிருந்து பெறப்படும் பனீரான டோஃபுவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

டெம்பே (Tempeh) என்பது சோயாவிலிருந்து தயாரிக்கப்படும்  நொதிக்க வைக்கப்பட்ட (Fermented) உணவுப் பொருள். இது முதுமையைத் தடுக்கும் ஆன்டி-ஏஜிங் (Anti-aging) பண்புகளைக் கொண்டது. குறிப்பாக, பாடி பில்டர்கள் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

சோயாவை எண்ணெயில் பொரிப்பதைத் தவிர்த்து, ஷாலோ ஃப்ரை (Shallow fry) செய்து சாப்பிடலாம். சோயா பீன்ஸை ஊறவைத்து  அரைத்து அடை செய்யலாம் அல்லது சுண்டல் போலவும்  செய்து சாப்பிடலாம்.

சிலருக்கு சோயா சாப்பிடும்போது அரிப்பு, தடிப்புகள் அல்லது செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். இது மிகக் குறைந்த சதவிகிதத்தினருக்கே ஏற்படும். சோயாவில் நல்ல தரமான புரதம் இருந்தாலும், மற்ற பருப்பு வகைகளை விட இதில் கொழுப்புச்சத்து (சுமார் 9 கிராம்) சற்றே அதிகம்.

எனவே, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்துவிட்டு, சோயாவையும் நார்ச்சத்துள்ள (Fiber) உணவுகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

சோயா பால்

மார்பகப் புற்றுநோய் உள்ளவர்கள் மிகவும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட (Highly processed) சோயா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எனினும், சாதாரணமாகச் சமைக்கப்படும் சோயா சுண்டல் போன்ற உணவுகளை உண்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரித்து, டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) அளவு குறைவது போன்ற பாதிப்பு ஏதேனும் இருந்தால், அவர்கள் சோயாவைத் தவிர்ப்பது நல்லது.

மற்றபடி சோயா உணவுகளால்  ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி (Breast development) அதிகரிக்கும் என்று கூறப்படுவதில் அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை. சோயாவுக்கும் மார்பக வளர்ச்சிக்கும் நேரடித் தொடர்பு கிடையாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...