Skip to main content

Doctor Vikatan: கசப்பான வெள்ளரிக்காய்... பாம்பு ஏறியதுதான் காரணமா... அதைச் சாப்பிடலாமா?

Doctor Vikatan: வெள்ளரிக்காய் வாங்கும்போது சில காய்கள் கசப்புத்தன்மையோடு இருக்கின்றன. பாம்பு ஏறிய காய், அப்படித்தான் கசக்கும் என்கிறார்களே... அது உண்மையா... கசப்புச்சுவை உள்ள வெள்ளரிக்காய்களைச் சாப்பிடலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. 

சித்த மருத்துவர் அபிராமி
சித்த மருத்துவர் அபிராமி

வெள்ளரிக்காய் கசப்பாக இருந்தால், அது பாம்பு தீண்டிய காய் என்று கிராமங்களில் இன்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், அது உண்மையானதல்ல.

வெள்ளரிக்காயின் கசப்புத்தன்மைக்கு உண்மையான அறிவியல் காரணம் என்னவென்றால், அதிகப்படியான வெயில் அல்லது தண்ணீர் இல்லாத வறட்சியான சூழலில் வளரும் வெள்ளரிக்காய்களில் 'குகுர்பிடேசின்' (Cucurbitacin) எனும் சத்து அதிகரிப்பதுதான். கசப்பான வெள்ளரிக்காயைச் சாப்பிடுவதால் ஒன்றும் பிரச்னை இல்லை என்று சிலர் அதைச் சாப்பிடுவதுண்டு. ஆனால், கசப்பான வெள்ளரிக்காய், பலருக்கு வயிறு தொடர்பான உபாதைகளை (Stomach upset) ஏற்படுத்தக்கூடும். வயிற்று வலி, வாந்தி, ஏப்பம், குமட்டல் போன்ற தொந்தரவுகள் உண்டாகலாம். சிலருக்கு இந்த பாதிப்பு தீவிரமடைந்து, இரண்டு, மூன்று நாள்களுக்கு நீடிக்கலாம், சில சமயம் வாந்தியில் ரத்தம் வரும் அளவிற்கு (Blood vomiting) மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

கசப்பான வெள்ளரிக்காய் மட்டுமன்றி, பாகற்காய் (அதிக கசப்பு இருந்தால்), சுரைக்காய், மற்றும் பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்களிலும் இந்த ' குகுர்பிடேசின்' சத்து இருக்க வாய்ப்புள்ளது.

கசப்பான  வெள்ளரிக்காய் மட்டுமன்றி, பாகற்காய் (அதிக கசப்பு இருந்தால்), சுரைக்காய், மற்றும் பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்களிலும் இந்த 'குகுர்பிடேசின்' சத்து இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய காய்கறிகளைச் சமைப்பதற்கு முன், அவற்றின் மேல் தோலை நீக்கிவிட்டு, ஒரு சிறிய துண்டைச் சுவைத்துப் பார்த்துவிட்டு, கசப்புத்தன்மை இல்லை என்பதை உறுதிசெய்து கொண்டு பயன்படுத்துவது சிறந்தது. கசப்பாக இருந்தால் கண்டிப்பாகச் சமைக்கவோ, சாப்பிடவோ கூடாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...