Skip to main content

Doctor Vikatan: மாத்திரை போட்டால் மட்டுமே வரும் மாதவிடாய், தீர்வே கிடையாதா?

Doctor Vikatan: உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் வருவதில் சிக்கல் இருக்குமா? நான் 80 கிலோ எடை இருக்கிறேன். வயது 35. எனக்கு மாதந்தோறும் பீரியட்ஸ் சரியாக வருவதில்லை. மாத்திரை எடுத்துக்கொண்டால் மட்டுமே வரும், இல்லாவிட்டால் வராது. இந்தப் பிரச்னைக்கு ஏதேனும் தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

மாதவிடாய் பிரச்னைகளுக்கு உடல்பருமன் மிக முக்கியமான காரணம் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் வயதையும் எடையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நீங்கள் உடல்பருமன் பிரிவில்தான் வருவதாகத் தோன்றுகிறது. 

உடல் பருமன் பிரச்னை என்பது மாதவிடாய் சுழற்சியை மாற்றுவது மட்டுமன்றி, தலை முதல் பாதம் வரை பல பிரச்னைகளுக்கும் காரணமாகும்.

இதிலிருந்து விடுபட நீங்கள் முதலில் வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பின்பற்ற வேண்டும். பகலில் தூங்குவதையும் அதிக உணவுகளை எடுத்துக்கொள்வதையும் தவிர்ப்பது, ஃபாஸ்ட் ஃபுட்டை தவிர்ப்பது, செயற்கை நிறமி மற்றும் மணம் சேர்க்கும் உணவுகளைத் தவிர்ப்பது போன்றவை அவசியம்.

தினமும் குறிப்பிட்ட நேரம் நடைப்பயிற்சி செய்யலாம். யோகாவும்  உதவும்.

உடலை இளைக்கச் செய்கிற உணவுகளைத் தேர்வுசெய்து சாப்பிட வேண்டும். வறுத்த, பொரித்த உணவுகள் தவிர்த்து, ஆவியில் வெந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

காலை உணவுக்கு முளைக்கட்டிய தானியங்கள், அவல் போன்றவற்றை 50 கிராம் அளவு எடுத்துக்கொள்ளலாம். கூடியவரையில் சமைக்காமல் சாப்பிடுவது சிறந்தது.  

உடல் பருமன் பிரச்னை

உங்களுக்கு தைராய்டு பாதிப்பு இருக்கிறதா என்று டெஸ்ட் செய்து பார்க்கவும். ஒருவேளை இருந்தால் அதற்கான முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

தைராய்டை குணப்படுத்தாமல் மாதவிடாய் பிரச்னை சரியாகும் என எதிர்பார்க்கக்கூடாது. மாதவிடாயை முறைப்படுத்தக்கூடிய இயற்கையான மருத்துவமுறைகள் சித்தாவில் உள்ளன.

இரண்டு பல் மலைப்பூண்டை, ஒரு கப் பாலில் வேகவைத்து, நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். கறிவேப்பிலையை அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் காலையில்  சாப்பிடுங்கள்.

முருங்கைக்கீரை, தினம் 2 எள்ளுருண்டைகள், கல்யாண முருங்கையில் அடை, தோசை போன்றவற்றை சாப்பிடுங்கள். மலைவேம்புச் சாற்றை மாதத்தில் மூன்று முறை 15 முதல் 20 மில்லி அளவுக்கு காலையில் குடிக்கலாம்.

கழற்சிக்காய் என்று சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதன் விதைகளை தினம் 5 என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தாலும் மாதவிடாய் சுழற்சி முறைப்படும்.

இவையெல்லாம் அடிப்படையான ஆலோசனைகள்.   மருத்துவரை அணுகினால், உங்களுக்குத் தேவைப்படுகிற பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார். அவற்றில் தெரியும் விஷயங்களுக்கேற்பவும் உங்களுக்கான சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார். 

எடைக்குறைப்பு, உணவுக்கட்டுப்பாடு, மருத்துவ சிகிச்சை என எல்லாம் சேரும்போது உங்கள் மாதவிடாய் சுழற்சி முறைப்படும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...