Skip to main content

Doctor Vikatan: 40 வயது, இரண்டாம் திருமணம், பல வருடங்களாக குழந்தையில்லை; இனி சாத்தியம் ஆகுமா?

Doctor Vikatan: நாங்கள் இருவரும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டவர்கள். நான்  40 வயது பெண். எனக்கு கருத்தடை ஊசிபோட்டு இருக்கிறார்கள். 18 வருடங்களாக குழந்தை பிறக்கவில்லை. எங்களுக்கு மீண்டும் ஒரு குழந்தை வேண்டும்.  அதற்கு சாத்தியம் இருக்கிறதா?

-Jothi basu, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

உங்கள் கேள்வியில் சில விஷயங்களில் தெளிவில்லை. 40 வயது என்கிறீர்கள், குழந்தை வேண்டும் என்கிறீர்கள், கருத்தடை ஊசி போட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்கிறீர்கள். ஒன்றுக்கொன்று முரணாகத் தெரிகிறது. 

உங்களுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருக்குமானால், முதலில் கருத்தடை முறைகளை நிறுத்த வேண்டும். 

கருத்தடை முறையை நிறுத்தினால்தான் ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பு மீண்டும் நிகழும். அதன் பிறகு கருத்தரிப்பு முயற்சிகள் ஆரம்பமாகும். உங்கள் கணவரின் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை.

உங்களுக்கு 40 வயது என்பதால் ஒவேரியன் ரிசர்வ் எனப்படும் முட்டை இருப்பு குறைந்துகொண்டே வரும். அதை 'ஏ.எம்.ஹெச்' (Anti-Mullerian Hormone) எனப்படும் டெஸ்ட்டின் மூலம் தெரிந்துகொள்ளலாம். 

அதை வைத்து உங்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பொதுவாக 35 வயதுக்குப் பிறகு இந்த முட்டைகளின் இருப்பு குறையத் தொடங்கும்.  40 வயதில் அது இன்னும் குறைந்திருக்கும்.

இயற்கையான முறையில் குழந்தை பெறும் முயற்சிக்கு பதிலாக ஐவிஎஃப் சிகிச்சையை நீங்கள் நாடுவது சிறப்பு.

18 வருடங்களாக உங்களுக்குக் குழந்தை இல்லை என குறிப்பிட்டுள்ளீர்கள். 18 வருடங்கள் என்பது நீண்டகாலம் என்பதால், உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் பரிசோதனைகள் அவசியம். ஹார்மோன் டெஸ்ட், ஸ்கேன், விந்தணுப் பரிசோதனை, முழு உடல் பரிசோதனை என எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இயற்கையான முறையில் குழந்தை பெறும் முயற்சிக்கு பதிலாக ஐவிஎஃப் சிகிச்சையை நீங்கள் நாடுவது சிறப்பு. உங்களுடைய வயது இந்த விஷயத்தில் தடையாக இருக்க வாய்ப்புள்ளதால், கருமுட்டைகளின் தரம் சோதிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் கருமுட்டை தானம் பெற வேண்டி வரலாம்.

எனவே, இனியும் தாமதிக்காமல் முதல் வேலையாக குழந்தையின்மை சிகிச்சை மருத்துவரை அணுகுங்கள். அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை உடனே செய்யுங்கள். இயற்கை முறையில் குழந்தைபெற முயற்சி செய்ய நினைத்து, இன்னும் சில வருடங்களை வீணடித்துவிட்டால், பிறகு ஐவிஎஃப் சிகிச்சையும் கைகொடுக்காமல் போகலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...