Doctor Vikatan: உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் வருவதில் சிக்கல் இருக்குமா? நான் 80 கிலோ எடை இருக்கிறேன். வயது 35. எனக்கு மாதந்தோறும் பீரியட்ஸ் சரியாக வருவதில்லை. மாத்திரை எடுத்துக்கொண்டால் மட்டுமே வரும், இல்லாவிட்டால் வராது. இந்தப் பிரச்னைக்கு ஏதேனும் தீர்வு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி மாதவிடாய் பிரச்னைகளுக்கு உடல்பருமன் மிக முக்கியமான காரணம் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் வயதையும் எடையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நீங்கள் உடல்பருமன் பிரிவில்தான் வருவதாகத் தோன்றுகிறது. உடல் பருமன் பிரச்னை என்பது மாதவிடாய் சுழற்சியை மாற்றுவது மட்டுமன்றி, தலை முதல் பாதம் வரை பல பிரச்னைகளுக்கும் காரணமாகும். இதிலிருந்து விடுபட நீங்கள் முதலில் வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பின்பற்ற வேண்டும். பகலில் தூங்குவதையும் அதிக உணவுகளை எடுத்துக்கொள்வதையும் தவிர்ப்பது, ஃபாஸ்ட் ஃபுட்டை தவிர்ப்பது, செயற்கை நிறமி மற்றும் மணம் சேர்க்கும் உணவுகளைத் தவிர்ப்பது போன்றவை அவசியம...