Doctor Vikatan: என் வயது 49. மெனோபாஸ் அறிகுறிகள் ஆரம்பித்துவிட்டன. கை, கால்களில் வலியையும், பலவீனத்தையும் உணர்கிறேன். மருத்துவர் கால்சியம் மாத்திரை எழுதிக்கொடுத்தார். ஆனால், கால்சியம் மாத்திரை சாப்பிட்டால், கிட்னியில் கல் வரும் என்கிறாள் என் தோழி. அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் மெனோபாஸ் காலத்தில் பெண் உடலின் மிக முக்கிய ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் வெகுவாகக் குறைந்துவிடும். அதனால் 50 ப்ளஸ் வயதில் எலும்புகளின் வலிமை குறைய ஆரம்பிக்கும். ஒருநாளைக்கு ஒரு பெண்ணுக்கு 500 முதல் 1000 மில்லிகிராம் கால்சியம் தேவை. சிலருக்கு அவர்களது உடல்நிலையைப் பொறுத்து இது 2,000 மில்லிகிராம்கூட தேவைப்படலாம். உணவின் மூலம் இந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாது என்பதால் சப்ளிமென்ட் எடுக்க வேண்டும். மெனோபாஸில் கால்சியம் குறைபாடு காரணமாக, எலும்புகள் மென்மையாகும் ஆஸ்டியோபொரோசிஸ் என்கிற பிரச்னை, லேசாக இடறினாலோ, தடுக...