Skip to main content

Doctor Vikatan: வழுக்கை தலையில் முடி வளரச் செய்யுமா சின்ன வெங்காயச்சாறு?

Doctor Vikatan: என்னுடைய தோழி  அடிக்கடி சின்ன வெங்காயத்தை அரைத்துச் சாறு எடுத்துத் தலையில் தடவிக் குளிக்கிறாள். அது அவளுக்கு முடி வளர்ச்சிக்கு உதவுவதாகச் சொல்கிறாள். சின்ன வெங்காயச் சாற்றுக்கு வழுக்கைத் தலையில் கூட முடி வளரச் செய்யும் ஆற்றல் உள்ளதாகச் சொல்கிறார்களே... அது உண்மையா... எல்லோரும் இதைப் பின்பற்றலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை ஆலோசகரும் அரோமாதெரபிஸ்ட்டுமான கீதா அஷோக்.

கீதா அஷோக்

சின்ன வெங்காயச் சாறு தடவுவதால், 'ஆண்ட்ரோஜெனடிக் அலோபேஷியா' (Androgenetic alopecia) எனப்படும் வழுக்கை பாதிப்பு சரியாகும் என்பதற்கு அறிவியல்ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. தவிர, தலையில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய்ப் பசையையும் வெங்காயச் சாறு அகற்றிவிடும். அதனால், மண்டைப்பகுதி வறண்டு போகும். 

தலையில் இயற்கையான எண்ணெய்ப்பசை இருப்பதுதான் ஆரோக்கியமானது. அது குறைந்து வறண்டுபோகும்போது முடி வறண்டு உதிரும். கூந்தலின் கறுப்பு நிறம் மாறி, செம்பட்டையாவதற்கும், நரைப்பதற்கும்கூட இது காரணமாகலாம். 

வெங்காயத்தில் சல்ஃபர் எனப்படும் கந்தகச்சத்து அதிகமிருக்கும். சின்ன வெங்காயத்தை பச்சையாக அரைத்து அதை அப்படியே தலையில் தடவும்போது முடி மெலியும், உடையும். வெங்காயச் சாற்றைத் தலையில் தடவி, மணிக்கணக்கில் ஊறி, பிறகு குளிக்கும்போது, கொத்துக் கொத்தாக முடி உதிரும். அதன் கடுமையான கந்தகத்தன்மை, முடியின் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.

சின்ன வெங்காயத்தை பச்சையாக அரைத்து அதை அப்படியே தலையில் தடவும்போது முடி மெலியும், உடையும்.

சின்ன வெங்காயச் சாற்றையோ, விழுதையோ தலையில் தடவும்போது அளவுக்கதிக அரிப்பை உணர்வார்கள். சொரிந்து சொரிந்து மண்டைப்பகுதியே செதில் செதிலாகக் காணப்படும்.  வெங்காயத்தில் உள்ள அதிக கந்தகத்தன்மையின் காரணமாக, கண்களில் எரிச்சல், அரிப்பு, இமை முடிகள் உதிர்வது போன்றவையும் ஏற்படலாம்.

எனவே, இதுபோல கண்டது, கேட்டது, அடுத்தவர் செய்வது போன்ற விஷயங்களை அப்படியே கண்மூடித்தனமாக நம்பி பின்பற்றாமல், சரியான மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனை கேட்டு எதையும் செய்யுங்கள். கூந்தல் வளர்ச்சி என்பது ஆரோக்கியமான உணவுப்பழக்கம், ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை, சரியான தூக்கம் போன்றவற்றைப் பொறுத்தது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...