Skip to main content

Dream & Psychology: கனவுகளுக்கு அர்த்தம் இருக்கிறதா? உளவியல் நிபுணர்கள் சொல்வதென்ன?

னவு காணாத மனிதர்களே இல்லை. அறிவியல் என்னதான் பல மடங்கு முன்னேறிவிட்டாலும், கனவு பற்றிய புரிதல் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. கனவுக்கும் தூக்கத்துக்கும் தொடர்பு இல்லை. உண்மையில், கனவுகள் நம் விழிப்போடு தொடர்பு உடையவை. நம் எண்ணங்களின் பிரதிபலிப்புதான் கனவுகள். இவை பலதரப்பட்டவை. வயதுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப கனவுகளும் மாறுபடும். இதுபற்றி விரிவாகப் பேசுகிறார் மனநல மருத்துவர் ராமன்.

கனவுகளுக்கு அர்த்தம் இருக்கிறதா?
தூக்கம்

கனவுகள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கு தெளிவான கொள்கைகள் இல்லை. பல்வேறு கருத்துரைகள், சிந்தனைகள் நிலவுகின்றன. கனவுகள் ஒருவரின் ஆழ்மனதின் வெளிப்பாடு. நாம் தூங்கும்போது, `ரெம்’ (Rapid eye movement - REM) எனப்படும் கண்கள் வேகமாக அசையும் நிலையில் கனவுகள் வருகின்றன. இந்த நிலையில், உடலின் அனைத்துப் பகுதிகளும் சுயகட்டுப்பாட்டை இழந்து, முழுமையாக மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

கனவு உருவாக்கம் என்பது மூளையின் முக்கியச் செயல்பாடுகளில் ஒன்று. கனவுகள் உருவாகும் விதம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலருக்கு இடம், பொருள், முகம் தெளிவாகத் தெரியலாம். சிலருக்குக் கனவுகள் தெளிவற்றதாக புகைமூட்டமானதாகத் தோன்றும். பொதுவாக, நம் நிகழ்கால ஏக்கங்கள், கவலைகள், பிரச்னைகள் கனவின் மூலம் வடிவம் பெறுகின்றன. ஒரு சில நேரங்களில், நம் நிகழ்காலப் பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகள், கனவு மூலமாகக் கிடைக்கலாம்.

கனவுகள்
கனவுகள்

நம்மில் பலராலும் கனவுகளை எளிதில் நினைவுபடுத்த முடியாது. தூக்கம் கலைவது தன்னிச்சையாக நடந்தால், அவற்றை நினைவுக்குக் கொண்டுவருவது சுலபமாகிவிடும். மனஅழுத்தம், மனப்பதற்றம் உள்ளவர்களுக்கு, கனவுகள் கவலைக்குரியதாகவும், அதிர்ச்சி ஏற்படுத்தும் விதங்களிலும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகளுக்குத் தாயின் பிரிவு பற்றியும், முதியோருக்கு உடல்நிலை மற்றும் இறப்புப் பற்றியும் கனவுகள் வரலாம். ஒரு சிலருக்குக் கனவு காண்பதால் பதற்றம் அதிகரிக்கும்.

உளவியல் நிபுணர் இவான் வாலஸ் (Ian Wallace) என்பவர், தன்னுடைய 30 ஆண்டுகால உளவியல் அனுபவத்தில், ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட கனவுகளைப் பற்றி கேட்டு, அவற்றில் இருந்து மிக முக்கியமான கனவுகளை வகைப்படுத்தியிருக்கிறார். சில முக்கியமான, அடிக்கடி ஏற்படக்கூடிய கனவுகள் பற்றியும் அவற்றுக்கான பலன்களைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

கனவுகள்
கனவுகள்

* நிர்வாணமாக இருப்பது: உங்கள் பலவீனத்தை மற்றவர் அறிந்துகொள்கிறார்கள் என்று உங்கள் உள்மனம் அச்சப்படுவதைத் குறிக்கும்.

* விமானம், ரயில், பஸ் வாகனங்களைத் தவறவிடுவது: நீங்கள் ஏராளமான பொறுப்புக்களைக் கையில் எடுத்து இருப்பீர்கள்; அதை முடிக்க முடியுமா, முடியாதா என்ற அச்சத்தின் வெளிப்பாடு.

* பற்கள் உடைவது அல்லது விழுவது: ஒருவர் தங்களைப் பயன்படுத்திக்கொண்டிருப்பதைக் குறிக்கும்.

* குழந்தைகள் கனவில் வருவது: அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறீர்கள் என்பதைக் குறிக்கும்.

* உறவினர்கள், நண்பர்கள் இறப்பதுபோல் கனவு: இனம் புரியாத பயம் அல்லது புதிய மாறுதல் ஒன்றைக் குறித்த அச்சம் இருப்பதை இது வெளிப்படுத்துகிறது.

* கீழே விழுவது: நமக்குக் கவலைகள் அதிகமாக இருப்பதையும் மனக்கட்டுப்பாட்டை இழப்பதையும் குறிக்கும்.

* உணவுப் பொருட்கள் கனவில் வருவது: புத்திக்கூர்மை அடைவதைக் குறிக்கும். பொதுவாக, உணவு, நம் உடலுக்கும் மூளைக்கும் ஊட்டத்தை அளிக்கிறது.

கனவுகள்
கனவுகள்

* கைகள் வருவது: வெறும் கைகளைப் பார்ப்பது, நம்மால் எந்தப் பயனும் இல்லை என்ற சிந்தனையைக் குறிக்கும். கைகளைக் கழுவது போல் கனவு வருவது, தனிமையைக் குறிக்கும். கைகளை மூடி இருப்பதுபோல் வந்தால், நீங்கள் செல்லும் பாதை, தெளிவானது, சரியானது என்பதை உணர்த்தும்.

* வீடு அல்லது கட்டடம்: ஆழ்மனதின் எண்ணங்களைக் குறிக்கும். மேலும், ஒவ்வொரு தளம் மற்றும் அறையாக வருவது, வித்தியாசமான உணர்ச்சிகள், பழைய நினைவுகள் மற்றும் ஆழ்மனதைப் பாதித்த உண்மைச் சம்பவங்களை நினைவுபடுத்தும்.

* மிருகம் துரத்துவது: நிகழ்காலப் பிரச்னைகளில் இருந்து விலகி ஓடும் மனப் பான்மை உள்ளவர்களுக்கு இந்த மாதிரியான கனவுகள் வரலாம்.

* பறப்பது: சுதந்திரம், பிரச்னைகளில் இருந்து விடுவித்துக்கொள்ளல் ஆகியவை காரணமாக இருக்கலாம்.

* பணம்: சுயமதிப்பைக் குறிக்கும். பணப் பரிமாற்றம் செய்வதுபோன்ற கனவு வந்தால், நீண்ட நாள் எதிர்பார்த்த மாற்றங்கள் நிறைவேறப் போவதை அறிவுறுத்தும்.

* பாதைகள் அல்லது வெற்றுச் சாலைகள்: வாழ்க்கைப் பயணம் செல்லும் திசையை அறிவுறுத்தும். மேலும், உங்களுடைய வாழ்க்கைப் பாதை சரியாகத்தான் செல்கிறதா என்ற கேள்வியை எழுப்பும்.

கனவுகள்
கனவுகள்

* தண்ணீர்: பல விதங்களில் தண்ணீர் கனவில் வரலாம். அவற்றின் பொதுவான குறிப்பு, உணர்ச்சி மற்றும் மயக்கநிலை. மிகவும் அமைதியான சூழலில் குளத்தில் நீர் உள்ளது போன்ற கனவு, உங்களுடைய ஆழ்மனதைப் பிரதிபலிக்கும். கடல் போன்ற நீண்ட நீர்ப்பரப்பு, நீங்கள் எடுத்துள்ள வேலை அல்லது காரியத்தின் பலத்தைப் பிரதிபலிக்கும்; அவற்றை முடிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அறிவுறுத்தும்.

* உச்சியிலிருந்து கீழே விழுவது: தோல்வி பயம் காரணம்.

சிலருக்கு தாங்கள் அழுவது போல் கனவு வரலாம். அது நிகழ்கால வாழ்வில், அதிகப்படியான மனஅழுத்தத்துடன் இருப்பதால் வரும். தூக்கத்தில் கண்ணீர்த்துளி வருவது, விரும்பிய ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வது அல்லது மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவதைக் குறிக்கும்.

மீண்டும் மீண்டும் ஒரே கனவு வரலாம். இது சிலருக்கு பயத்தைக் கொடுக்கும். ஏதேனும் ஒரு நிகழ்வு குறித்து, கவலை அல்லது துக்கம் அதிகமாக உள்ளவர்களுக்கு இது போன்ற கனவுகள் வரலாம்.

தெரியாத நபரின் முகம் மீண்டும் மீண்டும் கனவில் வரலாம். அவர், உங்களின் ஆழ்மனதில் பதிவாகி உள்ள நிகழ்வுகளுடன் தொடர்புடை யவராக இருக்கலாம்.

பொதுவாக பாம்பைக் கனவில் காண்பவர்கள், ஏதோ ஒரு விஷயத்தை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள் என்பதைக் குறிக்கும்.

ஓடுவதுபோல் கனவு வரலாம். அது, நீங்கள் ஏதோ ஒன்றிலிருந்து விடுபட நினைக்கிறீர்கள் அல்லது ஒதுங்க நினைக்கிறீர்கள் என்பதைக் குறிக்கும். அது உங்களுக்கு அச்சம் அல்லது சங்கடமான சூழலை ஏற்படுத்தலாம்'' என்கிறார் டாக்டர் ராமன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...