Skip to main content

Doctor Vikatan: ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் நாள்களில் கடுமையான தலைவலி... காரணம் என்ன?

Doctor Vikatan: என் வயது 28. ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸின்போது எனக்கு கடுமையான தலைவலி வருகிறது. பீரியட்ஸ் முடிந்ததும் சரியாகிவிடுகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது. இதற்கு என்ன சிகிச்சை இருக்கிறது?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

பீரியட்ஸின்போதான தலைவலி என்பது மிகவும் சகஜமான விஷயம்தான். அதற்கு முக்கியமான காரணம், ஹார்மோன் மாற்றங்கள். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவானது, பீரியட்ஸ் தொடங்கும் முன்போ, அல்லது பீரியட்ஸ் வந்த உடனேயோ குறையும். அதன் விளைவாகவே நீங்கள் தலைவலியை உணர்வீர்கள்.

பீரியட்ஸ் நாள்களில் வரும் தலைவலிக்கு 'மென்ஸ்டுரல் மைக்ரேன்' (Menstrual migraine) என்ற பெயரே உண்டு. இதை 'கேட்டமீனியல் சிம்ப்டம்ஸ்' (Catamenial symptoms) என்றும் சொல்வதுண்டு. அதாவது பீரியட்ஸின்போது மட்டும் ஒருவருக்கு தலைவலி வரும். அதில் ஒருவகைதான் மென்ஸ்டுரல் மைக்ரேன். பீரியட்ஸின்போதான ப்ளீடிங்கை வெளியே தள்ள கர்ப்பப்பையானது சுருங்கும்.  அப்படிச் சுருங்கும்போது புராஸ்டோகிளாண்டின் என்றொரு கெமிக்கல் சுரக்கும். அதுவும் தலைவலியை ஏற்படுத்தலாம். அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு உள்ளவர்களுக்கும் அதீத களைப்பு, தலைவலி போன்றவை வரலாம்.

டீஹைட்ரேஷன் எனப்படும் நீர் வறட்சி, மனப்பதற்றம், போதுமான அளவு தூக்கமில்லாதது, சாப்பிடாதது போன்றவற்றாலும் தலைவலி வரலாம். ஒரு பக்கத்தில் வலி, கூடவே வாந்தி உணர்வு, வெளிச்சத்தைப் பார்த்தால் எரிச்சல் உணர்வு போன்றவை மென்ஸ்டுரல் மைக்ரேனின்  அறிகுறிகளாக இருக்கும்.

வலி நிவாரணிக்கு கட்டுப்படாதபட்சத்தில், நரம்பியல் மருத்துவரை அணுகி, அடுத்தகட்ட சிகிச்சை பற்றி கலந்தாலோசிக்கலாம்.

வலியைத் தாங்க முடியாதபோது பெயின் கில்லர் எடுத்துக்கொள்ளலாம். வலி நிவாரணிக்கு கட்டுப்படாதபட்சத்தில், நரம்பியல் மருத்துவரை அணுகி, அடுத்தகட்ட சிகிச்சை பற்றி கலந்தாலோசிக்கலாம். பீரியட்ஸின்போது ஏற்படுகிற சாதாரண தலைவலிக்கு மக்னீசியம் சப்ளிமென்ட்டுகளும் உதவும். மருத்துவரைக் கேட்டு அதையும் எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு ஈஸ்ட்ரோஜென் அளவை நிலைப்படுத்த வாய்வழியே எடுத்துக்கொள்ளக்கூடிய கருத்தடை மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைப்பார். ஹார்மோன்களை உள்ளடக்கிய அந்த மாத்திரைகளும் தலைவலியை சரியாக்கும். 

உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, சரியான நேரத்துக்கு சாப்பிடுவது,  போதுமான தூக்கம், யோகா, வெந்நீர் அல்லது ஐஸ் ஒத்தடம் போன்றவை ஓரளவு உதவும். ஹெட்ஏக் டைரி என ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். எப்போதெல்லாம் தலைவலி வருகிறது, எத்தனை நாள், எத்தனை மணி நேரம் நீடிக்கிறது என்று குறித்துவையுங்கள்.  மருத்துவரை சந்திக்கும்போது அவை கூடுதல் தகவல்களாக உதவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...