Skip to main content

Doctor Vikatan: நாவல் பழங்கள் சாப்பிட்டால் தொண்டை கட்டுவது ஏன்?

Doctor Vikatan: நாவல் பழம் சாப்பிட்டால் தொண்டை கட்டுவது ஏன்? ஜலதோஷம் பிடிக்குமா, நாவல்பழ கொட்டைகளை பொடியாக்கி, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும் என்பது உண்மையா?  அதை எப்படி சரியான பக்குவத்தில் தயாரித்து எப்படி, எவ்வளவு உபயோகிக்க வேண்டும்?

பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

நாவல்பழம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு ஏற்பட காரணம் அதன் துவர்ப்புச்சுவை. பாக்கு சாப்பிட்டால் எப்படி நாக்கு லேசாகத் தடிக்கிறதோ, அப்படித்தான் நாவல் பழம் சாப்பிடும்போது தொண்டையில் லேசான இறுக்கம் ஏற்படும். துவர்ப்புச் சுவையுள்ள உணவுகளின் தன்மைகளில் இதுவும் ஒன்று.

தினமும் 7 முதல் 8 எண்ணிக்கையில் நாவல் பழங்கள் சாப்பிடலாம். அதில் லேசாக உப்பும் மிளகுத்தூளும் தூவி சாப்பிட்டால், தொண்டை இறுக்கம் தவிர்க்கப்படும். நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தொண்டைக்கட்டு, தற்காலிகமானது. சிறிது நேரத்தில் தானாகவே சரியாகிவிடும். 

தொண்டை கட்டும், ஜலதோஷம் பிடிக்கும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பலரும் இந்தப் பழங்களைத் தவிர்க்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. 

இப்போது நாவல் பழ சீசன். அது முடிவதற்குள் முடிந்தவரை இந்தப் பழங்களைச் சாப்பிடுவது அவசியம். நாவல்பழத்தில் உள்ள ஆந்தோசயனின் என்ற நிறமி, புற்றுநோய்க்கு எதிராகப் போராடக்கூடியது.

சர்க்கரை நோயாளிகள்  நாவல் பழம் மற்றும் அதன் கொட்டை என இரண்டையுமே எடுத்துக்கொள்ளலாம். நாவல் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டைகளை வெயிலில் உலர்த்திப் பொடித்துக் கொள்ளவும். தினமும்  காலையில் அதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். ரத்தச் சர்க்கரை அளவு குறையும். ஆனால், இதை மட்டுமே செய்துவிட்டு ரத்தச் சர்க்கரை அளவு குறையும் என எதிர்பார்க்கக்கூடாது.  இதை கூடுதலாக ஒரு சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்ளலாம்.

சர்க்கரை நோய் இல்லாதவர்களும் நாவல் பழப் பொடியை வாரம் ஒரு முறை தேநீர் போலத் தயாரித்துக் குடிக்கலாம்.

சர்க்கரை நோய் இல்லாதவர்களும் நாவல் பழப் பொடியை வாரம் ஒரு முறை தேநீர் போலத் தயாரித்துக் குடிக்கலாம்.  இதிலுள்ள ஜம்போலின் என்ற வேதிப்பொருள், ரத்தச் சர்க்கரை அளவைக் குறைப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன. அது குறித்த தகவல்கள் சித்த மருத்துவத்திலும் சொல்லப்பட்டுள்ளன.

'நாவல் ஊற்று நீர்' பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாவல் மரங்களுக்கு அடியில் ஏதேனும் ஊற்றோ, சிற்றாறோ இருந்தால், அதிலிருக்கும் தண்ணீரைக் குடித்தாலே இனிப்பும் துவர்ப்புமாக அவ்வளவு ருசியாக இருக்கும். அந்தக் காலத்தில் இதை சர்க்கரை நோய்க்கான பானமாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். நாவல் பழத்தில் நிறைய வகைகள் உள்ளன. எது கிடைத்தாலும் சாப்பிடலாம். நாம் சாப்பிட மறந்த சுவைகளில் துவர்ப்புச் சுவை முக்கியமானது. அதை ஈடுகட்டும்வகையில் சீசனில் கிடைக்கும் நாவல் பழங்களை தவறவிடாமல் சாப்பிடுவது மிகச் சிறந்தது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...