Skip to main content

Doctor Vikatan: 17 வயது மகளுக்கு வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 110: சாதாரணமானதா, கவலைக்குரியதா?!

Doctor Vikatan: என் மகளுக்கு 17 வயதாகிறது. சமீபத்தில்தான் அவளுக்கு போர்டு எக்ஸாம் முடிந்திருக்கிறது.  அதன் காரணமாக தூக்கமில்லாமலும் அதிக ஸ்ட்ரெஸ்ஸிலும் இருந்தாள். கடந்த சில தினங்களுக்கு முன்பு, எனக்கு சுகர் டெஸ்ட் செய்தபோது மகளுக்கும் எடுத்துப் பார்த்தேன். அவளுக்கு வெறும்வயிற்றில் 110 என காட்டியது. இது சாதாரணம்தானா... கவலைப்பட வேண்டியதா?

- Santhiya, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி 

மருத்துவர் சஃபி

17 வயது மகள்... தேர்வு நேரத்தில், தூக்கமில்லாமல் இருந்தபோது சர்க்கரை அளவை செக் செய்திருக்கிறீர்கள். ஏன் டெஸ்ட் செய்தீர்கள் என்று தெரியவில்லை. அது அவரது ஸ்ட்ரெஸ்ஸை மேலும் அதிகரிக்கவே செய்திருக்கும். பொதுவாகவே, தேர்வு நெருங்கும்போதோ, உடல்நலமின்றி இருக்கும்போதோ, எதிர்பாராத நிகழ்வுகளின் போதோ 'ஸ்ட்ரெஸ் இண்டியூஸ்டு ஹைப்பர்கிளைசீமியா' (Stress-induced hyperglycemia -SIH) என்ற பிரச்னை வரலாம். ஏதேனும் காரணங்களால் நாம் ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாகும்போதும், பயத்துக்கு உள்ளாகும்போதும் நம் உடலில் கார்ட்டிசால் மற்றும் அட்ரீனலின்  சுரப்பு அதிகமாகும்.

காட்டிசாலும் அட்ரீனலினும் நம் உடலில் அதிக அளவிலான குளுக்கோஸை உற்பத்தி செய்யும். தவிர, இன்சுலின் சுரப்பையும் குறையச் செய்யும். இந்த இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்வதால் சிலருக்கு 'ஸ்ட்ரெஸ் இண்டியூஸ்டு ஹைப்பர்கிளைசீமியா' பாதிப்பு வரலாம். இதனால் ரத்தச் சர்க்கரை அளவானது, நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல 110 என்ற அளவிலும் இருக்கலாம்... சிலருக்கு 200 வரையிலும்கூட காட்டலாம்.  இப்படி ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாகக் காட்டும்போது அதற்காக பயப்படவோ, பதறவோ தேவையில்லை. மருந்து எடுக்க வேண்டிய தேவையும் இல்லை.

இந்த நேரத்தில் பேலன்ஸ்டு டயட் எனப்படும் சரிவிகித உணவு எடுக்கவேண்டியது முக்கியம். ஸ்ட்ரெஸ் மற்றும் பதற்றம் நீங்க ரிலாக்சேஷன் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால் அதை முறைப்படுத்த வேண்டும்.

பிள்ளைகளுக்கு தேர்வு நெருங்கும்போது, இடையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும், தூங்கவும் அனுமதிக்க வேண்டும். 6 முதல் 9 மணி நேரத் தூக்கம் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

பிள்ளைகளுக்கு தேர்வு நெருங்கும்போது, இடையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும், தூங்கவும் அனுமதிக்க வேண்டும். 6 முதல் 9 மணி நேரத் தூக்கம் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

ஸ்ட்ரெஸ் காரணமாக குழந்தைகள் நொறுக்குத்தீனிகள், பிஸ்கட் சாப்பிடுவது, ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது போன்றவற்றைச் செய்யாமல்  பார்த்துக்கொள்ள வேண்டும். சாப்பிடாமலேயே இருப்பதும் தவறு. காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும். ஸ்ட்ரெஸ் இல்லாமலிருப்பது மிக முக்கியம். ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க முடியாத பட்சத்தில், மருத்துவ ஆலோசனையை நாடலாம். மற்றபடி ஸ்ட்ரெஸ்ஸால் அதிகரிக்கும் ரத்தச் சர்க்கரைக்கு பயப்படத் தேவையில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...