Skip to main content

Doctor Vikatan: 10 வயதுக் குழந்தைக்கு பழைய சாதம் கொடுக்கலாமா, அதனால் சளி பிடிக்குமா?

Doctor Vikatan: என்னுடைய மகளுக்கு 10 வயதாகிறது. பெரும்பாலும் காலையில் எதையும் சாப்பிட மறுக்கிறாள். வீட்டில் நானும் என் கணவரும் தினமும் காலையில் பழையசாதம் சாப்பிடுகிறோம். அதையே என் மகளுக்கும் கொடுக்கலாமா, குழந்தைகளுக்கு பழைய சாதம் கொடுத்தால் ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும் என்கிறார்கள் சிலர். அது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

பெரியவர்கள் சாப்பிடுவதைப் போல, குழந்தைகளுக்கும் பழைய சாதம் கொடுக்கலாம். அதில் ஒரு பிரச்னையும் இல்லை.  இன்னும் சொல்லப் போனால் இப்போது வாட்டிவதைக்கும் வெயிலின் பாதிப்பிலிருந்தும் குழந்தைகளை அது காக்கும்.

பழைய சாதம் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் உள்ளன.   பழைய சாதத்தில் லாக்டிக் ஆசிட் பாக்டீரியாக்கள் (Lactic Acid Bacteria) அதிகமாக உள்ளன. இந்த பாக்டீரியாக்கள் பழைய சாதத்தை நொதிக்கச் செய்து, அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கின்றன.  குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகின்றன, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அதன் விளைவாக மைக்ரோநியூட்ரியன்ட்ஸ் எனப்படும் நுண்ணூட்டச்சத்துகள், தாதுச்சத்துகள் போன்றவை உடலில் அதிகரிக்கும்.

குழந்தைகளுக்குப் பழைய சாதம் கொடுக்கும்போது, அத்துடன் ஃப்ரெஷ்ஷான தயிர் சேர்த்துக் கொடுக்கலாம். அதன் மூலம் குடலுக்கு நன்மை செய்யும் புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 

குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும் உணவாகவும் பழைய சாதம் உள்ளது. காலை உணவை சாப்பிட மறுக்கும் பட்சத்தில் உங்கள் மகளுக்கு தயிர் சேர்த்த பழைய சாதம் கொடுப்பது நல்ல சாய்ஸ்.

பழைய சாதம்

இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எப்போது, எந்த உணவு எடுத்தாலும் அது பேலன்ஸ்டு உணவாக இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் பழைய சாதத்துடன் தயிர் மட்டுமன்றி, காய்கறிகளையும் சேர்த்துக் கொடுத்தால் அது முழுமையான உணவாக இருக்கும். மற்றபடி பழைய சாதம் கொடுப்பதால் குழந்தைகளுக்கு சளி பிடிக்க வாய்ப்பில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...