Skip to main content

Doctor Vikatan: 50 ப்ளஸ் வயதில் எடையைக் குறைக்க திடீரென ஜிம்மில் சேர்வது சரியானதா?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகளில் பருமன் அதிகமிருக்கிறது. இதுவரை நான் எந்த உடற்பயிற்சியையும் செய்ததே இல்லை. இப்போது எடையைக் குறைக்க முடிவெடுத்து ஜிம்மில் சேர யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த வயதில் எடையைக் குறைக்க ஜிம்மில் சேர்வது சரியா?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

50 ப்ளஸ் வயதில் உள்ள பெண்கள் பலருக்கும் திடீர் ஜிம் ஆசை வருவதை சமீப காலத்தில் அதிகம் பார்க்க முடிகிறது.  மெனோபாஸ் காலத்தில் உடல்எடையைக் குறைக்க நினைத்து அத்தனை வருடங்களாக பழக்கமே இல்லாத ஜிம் வொர்க் அவுட்டுக்கு தயாராகிறார்கள். 

திடீரென உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை. உடற்பயிற்சி என்பது இள வயதிலிருந்தே வாழ்க்கைமுறையில் ஓர் அங்கமாகப் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், பலரும் அந்த வயதில் அதை அலட்சியம் செய்துவிட்டு, வயதான பிறகே அக்கறை கொள்கிறார்கள்.  பெண்களைப் பொறுத்தவரை மெனோபாஸ் காலத்தில் அவர்களது உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களின் விளைவால் எடை அதிகரிப்பது சகஜம். 

நடுத்தர வயதில் பெண்களுக்கு இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் சதை போடும். தொப்பை பெரிதாகும்.  இதை 'மெனோபாட் ( meno-pot) அல்லது மெனோபட்ஜ்'  (meno-pudge) என்கிறோம். உங்களை ஆக்டிவ்வாக வைத்துக்கொள்வது, நார்ச்சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள் சாப்பிடுங்கள். உடற்பயிற்சிகளையும் தவறவிடாதீர்கள். இந்தப் பிரச்னையிலிருந்து உங்களை மீட்க அது மிக முக்கியம். களைப்பாக இருக்கிறது, உடம்புக்கு முடியவில்லை என ஏதாவது சாக்கு சொல்லாமல் உங்களால் முடிந்த ஏதோ ஓர் உடற்பயிற்சியோ, யோகாவோ, சைக்கிளிங்கோ செய்யலாம். 

ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்

50 ப்ளஸ் வயதில் திடீரென ஜிம்மில் சேர்ந்தாலும் அளவுக்கதிமாக, கடுமையாக வொர்க் அவுட் செய்ய வேண்டாம். குறிப்பாக, கார்டியோ பயிற்சிகளை அளவாகவே செய்ய வேண்டும். கார்டியோ பயிற்சிகளை 20 நிமிடங்கள் செய்துவிட்டு, பிறகு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் ஃப்ளோர் எக்சர்சைஸையும் செய்யலாம்.

மெனோபாஸுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பது நின்றுவிடுவதால் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு எலும்புகள் வலுவிழக்கும். அதனால் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் ஃபிராக்ச்சர் எனப்படும் எலும்பு முறிவு ஏற்படும் ரிஸ்க் அதிகம். எனவே, ஜிம் சென்று கடுமையான வொர்க்அவுட் செய்வதற்கு பதில் வாக்கிங் செய்வது பாதுகாப்பானது. ஜிம் செல்வதில் உறுதியாக இருந்தால் உங்கள் மகப்பேறு மருத்துவரை கலந்தாலோசித்துவிட்டு முடிவெடுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...