Skip to main content

Doctor Vikatan: கொளுத்தும் கோடையிலும் அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பது ஏன்?

Doctor Vikatan: சீசன் மாறும்போது, அதாவது குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் சளி பிடித்துக்கொள்வது இயல்பானது. ஆனால், எனக்கு கொளுத்தும் கோடையில்கூட அடிக்கடி ஜலதோஷம் பிடித்துக்கொள்கிறது. இதற்கு என்ன காரணம்... இதைத் தவிர்க்க வழி உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்

ஜலதோஷம் பிடிப்பதற்கான முக்கிய காரணம், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள்தான். அதிலும் பெரும்பாலும் வைரஸ் தொற்றுதான் ஜலதோஷத்தை ஏற்படுத்தும். இந்த இரண்டு தொற்றுகள் தவிர்த்து, அரிதாக சிலருக்கு பூஞ்சைத் தொற்று (Fungal infection) காரணமாகவும் சளி பிடிக்கலாம். 

வைரஸ்களில் லட்சக்கணக்கான வகைகள் உண்டு. அவற்றில் கோடைக்காலத்தில் சில வைரஸ்களும், குளிர்காலத்தில் சில வைரஸ்களும் ஆக்டிவ்வாக இருக்கும்.  திடீரென சளி பிடித்துக்கொள்வது, சைனஸ் பிரச்னை, காதுகளில் ஒருவித அசௌகர்யம், தொண்டைக் கரகரப்பு மற்றும் எரிச்சல், இருமல்... இவையெல்லாம் வைரஸ் தொற்றுகளின் பொதுவான மற்றும் முக்கியமான அறிகுறிகள். கோடையில் வெயில்தான் கொளுத்தி எடுக்கிறதே... பிறகு ஏன் ஜலதோஷம் பிடிக்கிறது என்ற கேள்வி பலருக்கும் உண்டு.  

கோடைக்காலத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் வைரஸ்கள்தான் கோடையிலும் சளி, இருமலை ஏற்படுத்துகின்றன. உதாரணத்துக்கு, என்டெரோ வைரஸ்கள் ( Enterovirus) கோடையில் ஆக்டிவ்வாக இருப்பதால், அதிகம் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுவே, குளிர் காலத்தில் ரைனோ வைரஸ்கள் (Rhinovirus) ஆக்டிவ்வாக இருப்பதால், அந்த சீசனில் அவை பாதிப்புகளை ஏற்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தி

என்டெரோ வைரஸானது சுவாசப்பாதையை பாதித்து சளி, இருமல் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம். வயிற்றுப்பகுதியை பாதித்து வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.  கோடையில் இந்த வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க, சத்தான உணவுகளைச் சாப்பிடுவது, நிறைய தண்ணீர் குடிப்பது, போதுமான அளவு தூங்குவது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.  கோடையில் ஏற்படும் இத்தகைய வைரஸ் தொற்றானது அதிகபட்சமாக மூன்று- நான்கு நாள்கள் இருந்துவிட்டு, தானாகவே சரியாகிவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தியை நன்றாக வைத்துக்கொள்வதுதான் இதிலிருந்து விடுபடும் ஒரே வழி. சளி, இருமல் வந்தாலே உடனே ஆன்டிபயாடிக் மருந்துகளை நீங்களாக வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஆன்டிபயாடிக்ஸ் என்பவை பாக்டீரியா தொற்றுகளுக்குப் பயன்படுத்த வேண்டியவை. தேவையில்லாமல் அவற்றை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...