Skip to main content

``புற்றுநோயிலிருந்து மீண்டு வர கவனம் செலுத்துகிறேன்" பிரிட்டன் இளவரசி கேட்! | Kate Middleton

Kate Middleton reveals she has cancer:

"தற்போது நான் நலமாக இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர உதவும் விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு நாளும் மனதளவிலும் உடல் அளவிலும் வலுவாக உள்ளேன்" என்று தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன்.

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன்!

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியமுக்கும் கேட் மிடில்டனுக்கும் 2011-ம் ஆண்டு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டரில் கோலாகலமாகத் திருமணம் நடந்தது. பிரிட்டன் மன்னர் சார்லஸுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு உள்ளதால், அரச பணிகளை தற்போது இளவரசர் வில்லியம்ஸ் கவனித்து வருகிறார். வில்லியம்ஸ் கேட் மிடில்டன் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் கேட் மிடில்டனை காணவில்லை என இங்கிலாந்தில் பெரிய பரபரப்பு கிளம்பியது. கேட், ஜனவரி மாதம் முதல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அரண்மனை தரப்பு செய்தி வெளியிட்டது.

cancer disease

அந்தச் செய்திக் குறிப்பில் ``இளவரசி கேட்டுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. ஈஸ்டர் பண்டிகை வரை அரச கடமைகளைச் செய்ய மாட்டார். அவருக்கு ஓய்வு தேவை" என்று அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமாகிவிட்டதாகவும், அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார் என்றும் வதந்திகள் கிளம்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

Kate Middleton பற்றிய சர்ச்சை தொடர்ந்து நிலவி வந்த நிலையில், அதற்கு முடிவு கட்டும் வகையில் வீடியோ ஒன்றை கேட் வெளியிட்டிருந்தார். அதில் அவர் ``எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நான் புற்றுநோய்க்கான ஆரம்பகட்ட சிகிச்சையில் இருக்கிறேன். எங்கள் குடும்ப நலன் கருதி நாங்கள் இந்த விவரங்களை வெளியே சொல்லாமல் இருந்தோம்.

Kate with Harry

புற்றுநோய் பாதிப்பு எனத் தெரிந்தவுடன் எனக்கும் வில்லியம்ஸுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து மீண்டு வர எனக்கு சில காலம் பிடித்தது. தற்போது நான் நலமாக இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர உதவும் விஷயங்களில் நான் கவனம் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு நாளும் மனதளவிலும் உடல் அளவிலும் வலுவாக உணர்கிறேன்" என்று அதில் தெரிவித்துள்ளார். தற்போது கேட் மிடில்டனுக்கு 42 வயது ஆகிறது.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...