Skip to main content

Doctor Vikatan: மஞ்சள் காமாலை (jaundice) அறிகுறிகளை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியாதா?

Doctor Vikatan: வயிற்று உப்புசம், சோர்வு, தூக்கம், வாந்தி என இருந்த என் 10 வயது மகனுக்கு மஞ்சள் காமாலை (jaundice) வந்ததைக் கண்டுபிடிக்காமல் மாத்திரை மேல் மாத்திரைகளாகக் கொடுத்து நோய் அதிகமாகி சீரியஸ் ஆகிவிட்டது. மஞ்சள் காமாலை பாதிப்பை ஓரிரு நாள்களிலேயே தெரிந்துகொள்ள முடியாதா?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

நீங்கள் உங்கள் மகனுக்கு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள வயிற்று உப்புசம், சோர்வு, தூக்கம் போன்ற பிரச்னைகள் தனித்தனியே இருந்தால் அது சாதாரண பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால், நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை குறிகுணங்களும் வாந்தியோடு சேர்ந்து இருக்கும்பட்சத்தில், அது கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கலாம் என்றே சந்தேகிக்க வேண்டும். சாமானியருக்கு அதை அப்படிப் பொருத்திப் பார்க்கத் தோன்றாதுதான். 

இத்தகைய அறிகுறிகள் சேர்ந்துவரும்போது தாமதிக்காமல் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுப்பதுதான் நல்லது. 10 வயதுச் சிறுவனுக்கு வயிற்று உப்புசம் வருவது தவறான விஷயம். அது எப்போதாவது வரலாமே தவிர, அடிக்கடி ஏற்பட்டால் நிச்சயம் வேறு ஏதோ பாதிப்பு இருப்பதாகவே அர்த்தம்.  கண்களில் நிற மாற்றம், சருமத்தில் நிற மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். அதன் மூலம் மஞ்சள் காமாலையாக இருக்குமோ என சந்தேகிக்கலாம்.

கல்லீரல்

எந்த அறிகுறியாக இருந்தாலும் மருத்துவ ஆலோசனையும் அவரது பரிந்துரையின் பேரில் சிகிச்சையும் எடுப்பதுதான் சரி. குழந்தைகள் விஷயத்தில் இதில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். நீங்களாக மருந்துக் கடைகளில் மருந்து வாங்கிப் பயன்படுத்துவது தவறு. எந்தப் பிரச்னையானாலும் மருந்துக் கடையில் கேட்டு மாத்திரைகள் சாப்பிடும் வழக்கம் பலரிடமும் இருக்கிறது. அதுவேகூட கல்லீரலை பாதிக்கக்கூடியது.

இப்போதும் ஒன்றும் பிரச்னையில்லை. உங்கள் மகனை முறையான மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். சரியான சிகிச்சையின் மூலம் கல்லீரல் நோய்களை சரிசெய்ய முடியும். மற்ற நோய்களைப் போல கல்லீரல் நோய்களை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாது. நிறைய பேருக்கு புற்றுநோய் பாதித்த பிறகுதான் கல்லீரல் பாதிப்பே தெரியவரும்.

தண்ணீர்

இப்போதைய தலைமுறையில், கல்லீரலில் கொழுப்பு படியும் 'ஃபேட்டி லிவர்' பிரச்னை அதிகம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த விஷயத்திலும் கவனம் தேவை. குழந்தைகளுக்கு சுகாதாரத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டியது மிக முக்கியம். சுகாதாரமற்ற நீர்நிலைகளில் குளிப்பது, சுகாதாரமற்ற நீரைக் குடிப்பது போன்றவற்றைத் தவிர்க்கச் சொல்லித் தர வேண்டும். தண்ணீர் மூலமும் ஆரோக்கிய குறைபாடுகள் வரலாம் என்பதால் அதிலும் கவனம் வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...