Skip to main content

Doctor Vikatan: காலை உணவுக்கு எனர்ஜி டிரிங்க், ஸ்மூத்தி எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான சாய்ஸா?

Doctor Vikatan:  கல்லூரி செல்லும் என் மகள் தினமும் காலை உணவு சாப்பிடுவதில்லை. அதற்கு பதில் எனர்ஜி டிரிங்க், ஸ்மூத்தி, ஜூஸ் என ஏதேனும் ஒன்றை குடித்துவிட்டுச் செல்கிறாள். இந்தப் பழக்கம் ஆரோக்கியமானதா... இவற்றைக்  குடிப்பதால் பாதிப்பு வருமா?

பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்  

டயட்டீஷியன் கற்பகம்

மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் ஆண்கள் என எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கும்,  லைட்டான உணவோடு தங்கள் நாளைத் தொடங்க விரும்புபவர்களுக்கும், எனர்ஜி டிரிங்க் மற்றும் ஸ்மூத்திகள் இன்று  விருப்பமான காலை உணவாக மாறிவிட்டன.

ஸ்மூத்திகள் நிச்சயமாக ஆரோக்கியமான தேர்வுதான், ஆனால் ஸ்மூத்தியில் சேர்க்கப்படும் பொருள்கள் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை கருத்தில் கொள்வது அவசியம். ஸ்மூத்தியில்  பொதுவாக சர்க்கரைச்சத்து  அதிகமாகவும், புரோட்டீன் சத்து குறைவாகவும் இருக்கும்.

எனவே, இதைக் குடித்ததும் உங்கள் ரத்தச் சர்க்கரை உயர்ந்து, அடுத்த ஒன்றிரண்டு மணிநேரத்தில் பசி  உணர்வை ஏற்படுத்தும் அல்லது மதிய உணவு நேரத்தில் அதிக பசியை ஏற்படுத்தும். காலை உணவுக்கு  ஸ்மூத்தி எடுத்துக்கொள்வதென முடிவெடுக்கும் முன், ஒரு தனிநபரின் உயரம், எடை, உடல்நல பாதிப்புகளைக் கருத்தில் கொள்வது அவசியம்.

தாவரப் பால்

காலை உணவுக்கு ஸ்மூத்தி எடுத்துக்கொள்ள விரும்புவோர், அதை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றிக்கொள்ளலாம்.  பாதாம் பால், தேங்காய்ப் பால், சோயா பால், சாதாரண பால், தயிர் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாக வைத்து ஸ்மூத்தி தயாரிக்கலாம்.  ஸ்மூத்தியில் பல்வேறு வகையான பழங்களைச் சேர்த்து சுவையையும் நார்ச்சத்தையும் அதிகரிக்கலாம்.

ஸ்மூத்தியில் புரோட்டீன் பவுடர், தயிர், நட்ஸ் அல்லது நட்ஸ் பட்டர் சேர்ப்பது அதை இன்னும் சத்தானதாக மாற்றும்.  நட்ஸ், ஆளி விதை, சியா விதை, சப்ஜா விதை ஆகியவற்றைச் சேர்க்கலாம். சர்க்கரையோ, சுவையை அதிகரிக்க தேன், நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டியோ சேர்க்க வேண்டாம்.

300 முதல் 400 மில்லி அளவு ஸ்மூத்தி குடிப்பது நல்லது. அதைவிட அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாரத்தின் எல்லா நாள்களிலும் ஒரே மாதிரியான காலை உணவை  சாப்பிடாமல்  மாற்றி மாற்றிச் சாப்பிடுங்கள். அது உங்களுக்கு அனைத்துவிதமான சத்துகளும் கிடைக்க உதவும்.

சினைப்பை நீர்க்கட்டிகள், ஹார்மோன் பாதிப்புகள், நீரிழிவு, முறைதவறும் மாதவிடாய், வயிற்றுப் புண், அமிலம் எதுக்களிக்கும் பிரச்னை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகள் இருந்தால், மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று, ஸ்மூத்தி எடுத்துக்கொள்வது பற்றி முடிவெடுங்கள்.

எனர்ஜி டிரிங்க்

உடலளவில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர்கள், சுறுசுறுப்புடன் இயங்குபவர்கள், விளையாட்டில் ஈடுபடுவோர் போன்றோர் ஸ்போர்ட்ஸ் டிரிங்க் அல்லது எனர்ஜி டிரிங்க் எடுத்துக்கொள்ளலாம். அது ஆற்றலைக் கொடுக்கும். களைப்பின்றி வைக்கும். ஆனால் அதை உணவுக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மற்றபடி, நல்ல கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புள்ள இட்லி, தோசை, ஆம்லெட் போன்றவற்றையும், கஞ்சி, ஸ்மூத்தி போன்றவற்றையும் காலை உணவுக்கு மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...