Skip to main content

Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 38. என்னால் லேசான குளிரைக் கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தியேட்டர், பணியிடம் போன்ற இடங்களில் ஏசி செய்யப்பட்ட சூழலில் என்னால் இயல்பாக இருக்க முடிவதில்லை. மற்றவர்கள் எல்லோரும் இயல்பாக இருக்க நான் மட்டும் நடுங்கியபடி உட்கார்ந்திருக்கிறேன். இதற்கு என்ன காரணம்.... சிகிச்சை தேவைப்படுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்       

ஸ்பூர்த்தி அருண்

இதை மருத்துவமொழியில் 'கோல்டு இன்டாலரென்ஸ்' (Cold intolerance) என்று சொல்வோம்.  இந்தப் பிரச்னை உள்ளவர்களால் எந்தவிதமான குளிர்ச்சியையும் தாங்கிக்கொள்ளவே முடியாது. 

உடலின் வெப்பநிலை ஒரேயடியாகக் குறையும் 'ஹைப்போதெர்மியா' ( Hypothermia) பிரச்னையும் இதுவும் வேறு வேறு. அதாவது கோல்டு இன்டாலரென்ஸ் உள்ளவர்களுக்கு உடல் வெப்பநிலை இயல்பாகவே இருக்கும். ஆனால் அவர்களால் குளிரை மட்டும் தாங்கவே முடியாது. இந்தப் பிரச்னை ஏற்பட பல காரணங்கள் உண்டு. முக்கியமாக உடலின் கொழுப்பு சதவிகிதம் மிகவும் குறைவாக இருந்தால், இப்படி உணரலாம். அதாவது நம் சருமத்தின் அடியில் சப்கியூட்டேனியஸ் கொழுப்பு என ஒன்று இருக்கும். 

ஏசி செய்யப்பட்ட இடம்

அதுதான் உடல்வெப்பநிலையிலிருந்து பாதுகாப்பு அளிப்பது.  இது குறைவாக இருந்தால் அவர்களால் குளிரைத் தாங்கிக்கொள்ள இயலாமல் போகலாம். குளிர்ச்சியான சூழல்களில் இருந்து பழக்கமில்லாதவர்களுக்கும் இப்படி நிகழலாம். திடீரென அப்படிப்பட்ட சூழலில் இருக்க வேண்டி வரும்போது ஆரம்பத்தில் சில நாள்களுக்கு அப்படித்தான் இருக்கும். பழகப் பழக உடல் அந்தக் குளிரைத் தாங்கிக் கொள்ளும்.

அனோரெக்ஸியா என்ற உணவுக்குறைபாடு பிரச்னை சிலருக்கு இருக்கலாம். இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு உடல் எடை அதிகரித்துவிடக்கூடாது என்ற கவலை எப்போதும் இருக்கும். அதனால் உணவு விஷயத்தில் அதிதீவிர எச்சரிக்கை உணர்வோடு இருப்பார்கள்.  இதனாலும் அவர்களது உடலில் கொழுப்பு அளவு குறைந்து, அதன் தொடர்ச்சியாக குளிரைத் தாங்க முடியாத நிலை ஏற்படலாம்.

ரத்தச்சோகை

அடுத்த காரணம் அனீமியா எனப்படும் ரத்தச்சோகை.  அதாவது ரத்தச்சோகை காரணமாக ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும். அதனாலும் குளிர் தாங்க முடியாத நிலை ஏற்படும். இரும்புச்சத்துக் குறைபாடு, வைட்டமின் பி குறைபாடு போன்றவற்றால் ரத்தச்சோகை வரும். அதை சரிசெய்ய வேண்டியது அவசியம்.

தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்யும் ஹைப்போதைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கும் குளிரைத் தாங்க முடியாத நிலை ஏற்படலாம். சிலருக்கு குளிரைத் தாங்க முடியாதது மட்டுமன்றி, வலி, மரத்துப்போவது, உதறல் போன்றவைகூட இருக்கலாம். இன்னும் சிலருக்கு சருமம் வெளிறியோ, நீலநிறத்திலோ மாறக்கூடும். அதை 'ரேனாட்ஸ் டிசீஸ்' (Raynaud's disease) என்று சொல்வோம்.

தைராய்டு

இந்தப் பிரச்னையில் ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் சருமம் வெளிறிப்போய், பிறகு நீலநிறமாக மாறும். இதற்கு மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் தேவைப்படும். எனவே உங்கள் விஷயத்தில் இவற்றில் எது காரணம் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சையை எடுக்கவும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...