Skip to main content

Disease X : ``கொரோனாவை விட கொடியது; 50 மில்லியன் உயிர்களைப் பறிக்கும்" புதிய தொற்றுநோய் ஆரம்பமா?

`கோவிட் முடிவல்ல தொடக்கம்' என தொடர்ச்சியாக பல ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருவதைக் காண முடிகிறது. அந்த வரிசையில் `டிசீஸ் எக்ஸ்’ (Disease X) என்ற பெருந்தொற்று மனித உயிர்களைக் கொல்லக் காத்திருக்கிறது என எச்சரித்து இருக்கிறார், இங்கிலாந்தின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் டேம் கேட் பிங்காம்.

இது குறித்து டேம் கேட் பிங்காம் எச்சரிக்கையில், ``கோவிட் தொற்று அவ்வளவு ஆபத்தானதல்ல. ஆனால், அடுத்த தொற்றுநோய் சுமார் 50 மில்லியன் உயிர்களைப் பறிக்கக்கூடும். இது கொரோனா வைரஸை விட 20 மடங்கு ஆபத்தானது. 

கொரோனா பரிசோதனை

இந்தப் புதிய தொற்றுநோய்க்கு உலக சுகாதார அமைப்பு டிசீஸ் எக்ஸ் (Disease X) என்று பெயரிட்டுள்ளது. இந்த டிசீஸ் எக்ஸை தட்டம்மை போன்ற தொற்றுநோயாகவும், அதன் இறப்பு விகிதம் எபோலாவின் 67 சதவிகிதத்துடன் கற்பனை செய்து கொள்ளுங்கள். உலகில் எங்கோ இந்த நோய் பிரதிபலிக்கிறது. விரைவிலோ அல்லது சிறிது காலத்திற்குப் பின்னரோ யாராவது இதனால் நோய்வாய்ப்படத் தொடங்குவார்கள்.

ஆயிரக்கணக்கான தனிப்பட்ட வைரஸ்களை உள்ளடக்கிய 25 வைரஸ் குடும்பங்களை விஞ்ஞானிகள் இதுவரை கண்டறிந்துள்ளனர். இன்னும் மில்லியன் கணக்கான வைரஸ்கள் கண்டுபிடிக்கப்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

கொரோனாவிற்கே உலகம் ஆட்டம் கண்ட நிலையில், கொரோனாவைவிட கொடிய தொற்றா என மக்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இது குறித்து ஃபோர்டிஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் தொற்றுநோய் ஆலோசகர் டாக்டர் நேஹா கூறுகையில், ``கோவிட் தொற்று மற்றும் அதனுடன் தொடர்புடைய வேரியன்ட்கள் தொடர்ச்சியான உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும் அதே வேளையில், சுகாதார வல்லுநர்கள் இப்போது `டிசீஸ் எக்ஸ்' என்ற புதிய தொற்றுநோய்க்குத் தயாராகி வருகின்றனர். 

Death (Representational Image)

இந்தப் புதிய வைரஸ் ஸ்பானிஷ் ஃப்ளுவை (Spanish Flu) போலவே பேரழிவை உண்டாக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, டிசீஸ் எக்ஸ் என்பது நோய்க்கிருமியைக் குறிக்கிறது; இது தெரியாத பெரிய அளவிலான தீவிரமான தொற்றுநோயை ஏற்படுத்தும். மேலும் மனிதர்களிடையே பெரிய அளவிலான நோய்களுக்கு வழிவகுக்கும்’’ என்று கூறியிருக்கிறார்.

எச்சரிக்கையாக இருங்கள்!


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...