Skip to main content

`Corona-வைவிட ஆபத்தான நோய்த்தொற்று; 50 மில்லியன் பேர் உயிரிழக்கக்கூடும்!' - எச்சரிக்கும் நிபுணர்

உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா பெருந்தொற்றுபோல மற்றொரு வைரஸ் தொற்று ஏற்படலாம் என பிரிட்டனின் கொரோனா வேக்ஸின் டாஸ்க் ஃபோர்ஸ் தலைவராக இருந்த டேம் கேட் பிங்காம் எனும் நிபுணர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``2019-ம் ஆண்டு பெரும் பீதியைக் கிளப்பிய கொரோனா வைரஸ் தீவிரமாகவில்லை. ஒருவேளை அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரித்திருக்கும். தற்போது, கொரோனா தொற்றைவிட பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அடுத்த தொற்று உருவாகியிருக்கிறது.

கொரோனா வைரஸ்

அதன் பாதிப்பால் 50 மில்லியன் மக்கள் வரை உயிரிழக்க வாய்ப்பிருக்கிறது. உலக சுகாதார அமைப்பு அந்த தொற்றுநோயை `டிசீஸ் எக்ஸ்' (Disease X) என்று அழைக்கிறது. இந்த புதிய டிசீஸ் எக்ஸ் கொரோனாவைவிட ஏழு மடங்கு ஆபத்தாக இருக்கலாம். இந்தத் தொற்று ஏற்கெனவே நமக்கு மத்தியில் இருக்கும் வைரஸிலிருந்து உருவாக வாய்ப்புகள் அதிகம். கடந்த நூற்றாண்டில் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சல் காரணமாக அப்போது சுமார் 5 கோடிப் பேர் உயிரிழந்தனர். அதற்கு இணையான பாதிப்பை இந்தப் புதுத் தொற்று ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

இப்போது 25 வைரஸ் பிரிவுகளிலும் கண்காணித்துவருகிறோம். இதில் ஒவ்வொரு பிரிவிலும் ஆயிரக்கணக்கான தனிப்பட்ட வைரஸ்கள் இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்று உருமாறினாலும் அது பெருந்தொற்றாக மாறும் வாய்ப்புகள் அதிகம். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவும்போது பாதிப்பு மிக மோசமாக இருக்கும். இப்படியெல்லாம் ஏற்படுமா எனக் கேட்காதீர்கள். நிச்சயம் ஏற்படும். இந்தச் சூழலைச் சமாளிக்க வேண்டுமானால், உலக நாடுகள் தற்போதிலிருந்தே தடுப்பூசிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என எச்சரித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...