Skip to main content

Chris Pratt: ஒரு நாளில் 8 லிட்டர் தண்ணீர் குடிக்கும் கிறிஸ் பிராட் - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது பிரபலங்களிடையே வழக்கம். அதற்காக வொர்க் அவுட் செய்வது, டயட்டில் இருப்பது எனப் பல முயற்சிகளைத் தொடர்ச்சியாகச் செய்வதுண்டு. இன்னும் தாங்கள் நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்திற்கேற்ப தங்களது உடல் எடையைக் கூட்டுவதிலும், குறைப்பதிலும் தொடர் கவனம் செலுத்துவார்கள்.

கார்டியன்ஸ் ஆஃப் த காலக்ஸி

ஆனால், இதற்காக அவர்கள் மேற்கொள்ளும் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் வொர்க் அவுட் அளவுக்கு மீறிச் செல்லும்போது, அவை பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இப்படி தனது உடல் எடையை அதிகரிப்பதற்காக ஹாலிவுட் நடிகர் கிறிஸ் பிராட் செய்த செயல், தற்போது பல நிபுணர்களின் எச்சரிக்கையைப் பெற்று வருகிறது.

2014-ல் வெளியான `கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ என்ற மார்வெல் திரைப்படத்தின் மூலம் பெருமளவு கவனம் பெற்றவர், கிறிஸ் பிராட். இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்தின் உடல் எடையை அதிகரிப்பதற்காக ஒரு நாளில் 100 கிளாஸ் தண்ணீரைக் குடித்து இருக்கிறார்.

மார்வெல்லோடு தொடர்புடைய ஊட்டச்சத்து நிபுணர் பிலிப் கோக்லியா, அவரது எடையின் ஒவ்வொரு பவுண்டுக்கும் ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிக்கும்படி கிரிஸை அறிவுறுத்தி இருக்கிறார். அதனைப் பின்பற்றிய கிறிஸ், `` நான் நாள் முழுவதும், சிறுநீர் கழித்தேன். அது அச்சுறுத்தும் கனவாக இருந்தது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

அந்த நேரத்தில், கிறிஸ் சுமார் 107 கிலோ எடையுடன் இருந்தார், அதாவது அவர் ஒரு நாளில் 8 லிட்டர் தண்ணீரைக் குடித்திருக்கிறார். இந்தச் செய்தி பல சுகாதார நிபுணர்களின் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என எச்சரித்து வருகின்றனர். 

water

`குறுகிய காலத்தில் அதிக அளவு நீரை அருந்துவது மிகவும் ஆபத்தானது. சிறுநீரகத்தின் கழிவை வெளியேற்றும் திறனை மிஞ்சும் அளவிற்கு அதிகமாக நீங்கள் தண்ணீரை எடுத்துக் கொள்ளும்போது, `வாட்டர் இன்டாக்சிகேஷன்' அல்லது `ஹைபோநெட்ரீமியா' என்ற நிலை ஏற்படலாம்.

இது உங்களது ரத்தத்தின் சோடியம் அளவை நீர்த்துப் போகச் செய்கிறது. மேலும் மூளை செல்கள் உட்பட உயிரணுக்களின் வழக்கமான செயல்பாட்டை பாதிக்கலாம்’ என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். 


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...