Skip to main content

`இது முடியாவிட்டால், மோடி தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாரா?!' - சவால் விடுக்கும் கெஜ்ரிவால்

டெல்லி ஆம் ஆத்மி அரசில் அமைச்சர்களாகப் பதவி வகித்த சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கிலும், மணீஷ் சிசோடியா மதுபானக் கொள்கை ஊழல் வழக்கிலும் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பிறகு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொகுசு பங்களா பராமரிப்பில் ரூ.48 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜ.க குற்றம்சாட்டியது.அரவிந்த் கெஜ்ரிவால்

பின்னர் இந்த விவகாரத்தை விசாரிக்குமாறு சி.பி.ஐ-க்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். அதன்படி நேற்றைய தினம் சி.பி.ஐ தனது விசாரணையைத் தொடங்கியது. சி.பி.ஐ இன்று தனது விசாரணையின் முதற்கட்ட அறிக்கையைப் பதிவுசெய்திருக்கும் நிலையில், `சி.பி.ஐ விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லையென்றால், பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்வாரா?' என அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விட்டிருக்கிறார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ``பிரதமர் மன உளைச்சலில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட விசாரணைகளை அவர் நடத்தியிருக்கிறார். என்மீது மட்டும் 33-க்கும் மேற்பட்ட வழக்குகளை அவர் பதிவுசெய்திருக்கிறார். அனைத்தையுமே அவர் விசாரித்தார். ஆனால், ஒன்றுகூட வெளிவரவில்லை. டெல்லி முதல்வராக நான் பொறுப்பேற்ற நாள் முதல் இது போன்று என்னிடம் விசாரணை நடத்திவருகிறார்கள்.கெஜ்ரிவால் - மோடி

எனவே, இந்த விசாரணையில் சி.பி.ஐ எதையும் கண்டுபிடிக்காது. அவர்களின் முன்பு நான் அடிபணிய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், ஒருபோதும் நான் அடிபணிய மாட்டேன். எனவே, பிரதமர் மோடிக்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன். இந்த விசாரணையில் நீங்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லையென்றால், தவறான விசாரணை நடத்தியதற்காக மோடி தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாரா?" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
`எனக்குச் சொந்தமாக, எனது பெயரில் ஒரு வீடுகூட கிடையாது, ஆனால்..!'- குஜராத்தில் பிரதமர் மோடி பெருமிதம்


http://dlvr.it/SwlgcD

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...