Skip to main content

Apollo: மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர்; உடல் தானம் செய்ததை அடுத்து முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

தேனி அருகே நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர் வடிவேலின்(43) உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்துள்ளதையடுத்து அவரது உடல், தமிழக முதல்வர் அறிவித்த படி முழு அரசு பாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனுர் காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் வடிவேல். தேனி கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளராகவும் இருந்தார். இவரது மனைவி பட்டுலட்சுமி தேனி மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறார். செப் 23-ல் வடிவேல் அலுவலக பனி முடிந்து டூவீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தப்போது சீலையம்பட்டி அருகே சென்றபோது ரோட்டின் குறுக்கே வந்த மாடு அவரது டூவீலரில் மோதியது கீழே விழுந்த வடிவேல் தலை,காது, மூக்கு பகுதியில் பலத்த காயமடைந்தார். சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர்

அங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் தீவிர சிகிச்சைக்காக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதன்பின் அவரது குடும்பத்தினரிடம், வடிவேலின் உடல் நிலை மருத்துவமனையின் கவுன்சிலர்கள்  பேசினர். அப்போது, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தால் இன்னும் பலர் பயனடைய வாய்ப்பு உள்ளது என்று எடுத்துக் கூறினர். அதனை ஏற்றுக் கொண்ட அவரது குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்துடன் உடல் உறுப்புக்களை தானம் செய்ய சம்மதித்தனர்.

முழு மனதாக உடல் உறுப்புக்களை தானம் செய்வோர் உடல் அரசு முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ள நிலையில், வடிவேலின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் தமிழக மருத்துவம் மருத்துவக்கல்வி, மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேனி மாவட்ட ஆட்சியர் திரு.சஜீவனா I.A.S., மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் மற்றும் அப்போலோ மருத்துவமனை - மதுரை டிவிஷன் coo திரு நீலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ள நிலையில், தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது.

மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர்

தினமும் பலர் தங்களது உடல் உறுப்புக்களை தானமாக தந்து உதவும் நிலையில், முதல்வர் அறிவிப்புக்கு பின் இறந்த வடிவேலின் உடல் உறுப்புக்களை தானமாக வழங்க சம்மதித்த அவரது குடும்பத்தினருக்கு மனமார நன்றிகளை அப்போலோ குழுமத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், உடல் உறுப்பு தானம் என்ற மகத்தான சேவையை ஊக்குவிக்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் என்று அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும் இந்த சமயத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக அப்போலோ குழுமத்தினர் தெரிவித்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...