Skip to main content

Doctor Vikatan: முழங்கை மூட்டில் வலி... எலும்புகளின் ஆரோக்கியம் காப்பது எப்படி?

Doctor Vikatan: எலும்புகளின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது? எனக்கு முழங்கைகளில் வலி உள்ளது. அதற்கான தீர்வையும் சொல்லவும்.

- Shiva Kumar, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மூட்டு, எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் முகமது இஸ்மாயில்

மூட்டு, எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் முகமது இஸ்மாயில் | சென்னை

எலும்புகளின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் வைட்டமின் டி, கால்சியம் மற்றும் புரதச்சத்து ஆகிய மூன்றும் முக்கியம். கூடவே உடற்பயிற்சிகளும் மிக அவசியம். அதாவது வெயிட் டிரெயினிங் பயிற்சிகள் எலும்புகளை வலுவாக்கும்.

பால் மற்றும் பால் உணவுகள் அனைத்திலும் கால்சியம் சத்து இருக்கும். முருங்கைக்காய், முருங்கைக்கீரை, அகத்திக்கீரை போன்றவை எலும்புகளுக்கு ஆரோக்கியம் அளிப்பவை. பிரண்டையில் எலும்புகளை வலுவாக்கும் பிரத்யேக தன்மை உண்டு. எனவே பிரண்டையை அடிக்கடி துவையல் வடிவில் சேர்த்துக் கொள்ளலாம்.

முழங்கை மூட்டுகளில் வலி என்பது அடிபட்டதால் வரலாம், அந்த அடியானது தசையிலோ, தசைநாரிலோ, எலும்பிலோ பட்டதால் ஏற்பட்டதாக இருக்கலாம். கிருமித் தொற்றினால் சீழ்ப்பிடித்து அதனாலும் வலி வரலாம். ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பினாலும் வரலாம்.

மூட்டுகளை அதிகமாக உபயோகப்படுத்துவதன் விளைவாகவும் வலி வரலாம். வலிக்கான காரணம் தெரிந்தால்தான் சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும். அடிபட்டதால் ஏற்பட்ட வலி என்றால் அதற்கான சிகிச்சையையும், எலும்பு முறிவு காரணமாக வந்தது என்றால் அதைச் சரி செய்வதற்கான சிகிச்சையையும், தசைநார் பாதிப்பு என்றால் பிசியோதெரபி சிகிச்சையையும் கொடுக்க வேண்டியிருக்கும். ஒருவேளை தசைநார் அதிகமாக முறிந்திருந்தால் அதற்கோர் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

மூட்டு வலி

கிருமித் தொற்றால் மூட்டுகளில் சீழ்ப்பிடித்திருந்தால், அதை நீக்கவிட்டு, ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படும். ஆர்த்ரைட்டிஸால் ஏற்பட்ட வலி என்றால் அதற்கான சிகிச்சை வேறு... மூட்டுகளை அதிகப்படியாக உபயோகித்ததால் ஏற்பட்ட வலி என்றால், எந்தக் காரணத்தால் மூட்டு அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறதோ, அதைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இப்படி, காரணத்துக்கேற்ப பிசியோதெரபி, ஊசிகள், பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா சேர்த்த ஊசிகள் போன்று பல சிகிச்சைகள் உள்ளன.

ஆண்களுக்கு எலும்புகளின் அடர்த்தி குறையத் தொடங்கும்போது எலும்பு பாதிப்புகள் ஆரம்பிக்கும். அதுவே அவர்கள் உடற்பயிற்சிகள் செய்யும் வழக்கமுள்ளவர்களாக இருந்தால் அந்த பாதிப்பு குறைவாக இருக்கும். பெண்களுக்கு மெனோபாஸ் வரை ஹார்மோன் சப்போர்ட் இருப்பதால் பாதிப்பு குறைவாக இருக்கும்.

பிரண்டை

மெனோபாஸுக்கு பிறகு அது குறைவதால் எலும்பு ஆரோக்கியமும் பாதிக்கப்படும். பாதிப்புகள் வராமலிருக்க உணவுப்பழக்கம், உடற்பயிற்சி போன்றவற்றில் ஆரம்பத்திலிருந்தே கவனம் செலுத்துவதுதான் தீர்வு.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...