Doctor Vikatan: நான் சுமார் ஆறு ஆண்டுகளாக சிஓபிடி (COPD ) எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி பிரச்னைக்காக மருந்துகள் (டாக்ஸோலின், மான்டெக்-எல்சி உள்ளிட்டவை) எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதனுடன் மலச்சிக்கலுக்கான ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொண்டதில் சிக்கல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்குப் போய் விட்டது. அது பற்றிய விவரங்களைக் கேட்டபோது ஆங்கில மருந்துகள் மற்றும் சில ஆயுர்வேத மூலிகைகளின் சேர்க்கையில் ஏற்பட்ட எதிர்வினை காரணமாக இருக்கலாம் என்று சொன்னார்கள். இந்த நிலையில் நான் மலச்சிக்கல் பிரச்னைக்காக திரிபலா சூரணம் எடுத்துக்கொள்ளலாமா என்பதையும் தெளிவுபடுத்தவும். -மலைசாமி, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் திரிபலா சூரணம் என்பது மலச்சிக்கலைப் போக்கக்கூடிய ஒரு மருந்துதான். சிஓபிடி (COPD) எனப்படும் சுவாசப் பிரச்னைக்குச் சிகிச்சை பெற்றுவரும் அதே வேளையில், நீங்கள் தாராளமாக திரிபலா சூரணத்தை எடுத்துக் கொள்ளலாம். அ...