Doctor Vikatan: என் வயது 70. நான் பேசும்போது வாயில் இருந்து கெட்ட வாடை வருகிறது. எதிரில் உள்ளவர்கள் மூக்கைப் பிடித்துக் கொள்கிறார்கள். அது எனக்கு அவமானமாக இருக்கிறது. எனக்கு வயிற்றில் புண் எதுவும் இல்லை. மருத்துவரைப் பார்த்து மருந்துகள் எடுத்துக்கொண்டும் குணமாகவில்லை. சுகர் மற்றும் கொலஸ்ட்ராலுக்கு மாத்திரை சாப்பிடுகிறேன். வாய் துர்நாற்றப் பிரச்னையைக் குணப்படுத்த என்னதான் வழி? -வாசகர் , விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஏ.சங்கமேஸ்வரன். இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஏ.சங்கமேஸ்வரன் வாய் துர்நாற்றப் பிரச்னையை மருத்துவ மொழியில் 'ஹாலிடோசிஸ்' (Halitosis) என்று சொல்கிறோம். வாய் துர்நாற்றம் உள்ள நோயாளிகளுக்கு, அது எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய சில விரிவான பரிசோதனைகள் (Investigations) தேவைப்படுகின்றன. அந்த வகையில் நீங்கள் முதலில் பல் பரிசோதனை (Dental check-up) செய்து பார்த்து பற்கள் மற்றும் ஈறுகளில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்று ப...