Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் மலம் கழிக்காவிட்டால் அன்று முழுவதும் வயிறு உப்புசமாக இருக்கிறது. நார்ச்சத்துள்ள உணவுகள் அதிகம் சாப்பிடுகிறேன். சாப்பிட்டும் மலச்சிக்கல் தீரவில்லையே ஏன்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவரும், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான செந்தில் கணேசன். இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவரும், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான செந்தில் கணேசன் மலச்சிக்கல் சரியாக வேண்டுமென்றால் நார்சத்து (Fiber) மட்டும் சாப்பிட்டால் போதாது. நார்ச்சத்து பலனளிக்க வேறு சில விஷயங்களும் சரியாக இருக்க வேண்டும். அந்த விஷயங்களில் தண்ணீருக்கே முதலிடம். நார்சத்து சரியாக வேலை செய்ய ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குறைவாக இருந்தால், நார்சத்து குடலில் மலத்தை இன்னும் கடினமாக்கி மலச்சிக்கலைத் தீவிரப்படுத்தும். எப்போதும் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு குடல் இயக்கம் (Bowel Motility) மந்தமாகும...