Skip to main content

Doctor Vikatan: நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டாலும் குணமாகாத மலச்சிக்கல்... தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் மலம் கழிக்காவிட்டால் அன்று முழுவதும் வயிறு உப்புசமாக இருக்கிறது. நார்ச்சத்துள்ள உணவுகள் அதிகம் சாப்பிடுகிறேன்.  சாப்பிட்டும் மலச்சிக்கல் தீரவில்லையே ஏன்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவரும்,  புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான செந்தில் கணேசன்.

இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவரும், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான செந்தில் கணேசன்

மலச்சிக்கல் சரியாக வேண்டுமென்றால் நார்சத்து (Fiber) மட்டும் சாப்பிட்டால் போதாது. நார்ச்சத்து பலனளிக்க வேறு சில விஷயங்களும் சரியாக இருக்க வேண்டும். அந்த விஷயங்களில் தண்ணீருக்கே முதலிடம்.

நார்சத்து சரியாக வேலை செய்ய ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குறைவாக இருந்தால், நார்சத்து குடலில் மலத்தை இன்னும் கடினமாக்கி மலச்சிக்கலைத் தீவிரப்படுத்தும்.  எப்போதும் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு குடல் இயக்கம் (Bowel Motility)  மந்தமாகும். எனவே, தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம்.

கழிவறை பழக்கம் (Bowel Habit Training) சரியாகப் பின்பற்றப்பட வேண்டும்.  காலையில் எழுந்தவுடன் அல்லது காலை உணவுக்குப் பிறகு மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தால், அதைத் தாமதப்படுத்தாமல் உடனே கழிவறைக்குச் செல்ல வேண்டும். இதைத் தொடர்ந்து தினமும் கடைப்பிடித்தால் குடல் ஒரு கடிகாரம் போலச் செயல்படத் தொடங்கும்.

நார்சத்துள்ள உணவுப்பழக்கம், போதுமான அளவு தண்ணீர், முறையான உடற்பயிற்சி, சரியான கழிப்பறை பழக்கம் ஆகிய எல்லாம் சேர்ந்தால் தான் மலச்சிக்கல் முழுமையாக குணமாகும்.

தைராய்டு, சர்க்கரை நோய் (Diabetes), ஐபிஎஸ் (IBS), சிறுநீரகப் பிரச்னைகள் அல்லது சில மருந்துகளின்  பக்கவிளைவுகளாலும் மலச்சிக்கல் ஏற்படலாம். நார்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொண்ட பிறகும் இரண்டு வாரங்களுக்கு மேல் மலச்சிக்கல் தொடர்ந்தால் அல்லது மலத்தில் ரத்தம், திடீர் எடை இழப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக  இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவரை  அணுகிப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சுருக்கமாகச் சொன்னால், நார்சத்துள்ள உணவுப்பழக்கம், போதுமான அளவு தண்ணீர், முறையான உடற்பயிற்சி, சரியான கழிப்பறை பழக்கம் ஆகிய எல்லாம் சேர்ந்தால் தான் மலச்சிக்கல் முழுமையாக குணமாகும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...