Doctor Vikatan: எனக்கு கடந்த 5 வருடங்களாக தைராய்டு பாதிப்பு இருக்கிறது. அதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறேன். தைராய்டு மாத்திரைகளை நம் ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா... இடையில் நிறுத்திவிடலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் ஸ்பூர்த்தி அருண் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் தைராய்டு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தைராய்டு ரத்தப் பரிசோதனை (Thyroid Blood Test) எல்லாம் சீராகவும், சரியாகவும் இருக்கிறது என்றால் கூட, வருடத்திற்கு ஒரு முறையாவது தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதே சமயம், தைராய்டு ரத்தப் பரிசோதனை முடிவுகள் வழக்கத்திற்கு மாறாக (Abnormal) இருந்தால், மருத்துவர்கள் அந்த மருந்தின் அளவை மாற்றியமைத்துக் கொண்டே (Adjust) இருப்பார்கள். ஒருமுறை தைராய்டு மருந்தின் அளவை மாற்றிய பிறகு, 6 முதல் 8 வாரங்களுக்குப் பின் மீண்டும் தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அது ஒரு நல்ல நிலைக்கு, அதாவது இயல்பான அளவிற்கு (Normal range) வரும் வரை மருந்தின் அளவை மாற்றியமைக்க வேண்டிய தேவை இருக்...